சீதனம் எனும் -பேய்

வேர்வை வந்தால் வெறுப்பு என்று
வீட்டில் கிடக்கும் மாப்பிளைக்கு
நூறு பவுன் நகை வேணும்
நோகாமல் போக கார் வேணும்
நன்செய் புண்செய் நிலம்
நாப்பது ஏக்கர் வேண்டும்
அத்தனைக்கும் உயர்வான
அழகு பெண்ணும் வேண்டும்

இது திருமண சந்தையில்
அடிமட்ட கணக்கு

இதைக்கேட்க தகுதி என்ன
உனக்கு ??

ஆம்பள "..........அடிங் ..

இதையெல்லாம் பொண்ணுங்க
கேட்டா??
கடலில் வீழ்ந்த கடுகாய் போகும்
பலபேரின் கல்யாண கனவுகள்

சீதன பேய் பிடித்து அலையும்
சந்ததிகளே சற்று சத்தமின்றி
சிந்திப்பீரோ

உங்களுக்கென்று சொந்தமாய்
கால்கள் உண்டு மறவாதீர்
சீதனம் என்பதை மூலதனமாய்
பார்க்காதீர்
வாழ்வில் கண்ணியம் காப்போம்
பெண்ணியம் மீட்போம்

எழுதியவர் : இணுவை லெனின் (26-Jan-15, 2:22 pm)
பார்வை : 159

மேலே