போலச்செய்தல்

அவரைப்படித்தால்
அவரைப்போலவும்
இவரைப் படித்தால்
இவரைப்போலவும்
எழுதிவிட நேரும்
என்பதால்,
எவரையும் படிக்காமல்
எழுதுகிறேன்,
எவரையும் படிக்காமல்
எழுதும்
எவரையோ போல !

எழுதியவர் : குருச்சந்திரன் (26-Jan-15, 2:05 pm)
பார்வை : 166

மேலே