மானிடத்தை தேடிய என் விழிகள்

வியாபாரமாகிவிட்ட
வாழ்க்கை பயணத்தில்
எதையோ தேடுகின்றது என் விழிகள்.!!
பெயரில் சாமியாரும் செயலில் மிருகமாகவும் செயற்படும் கயவர்கள் .!
சாதி மாதம் என்று நாட்டையே கூறுபோடும் வெறியர்கள் .!
பெத்த பிள்ளையை விற்று விட்டு
பத்தினியாய் வேஷம் போடும் பெண் .!
தன் பிள்ளையின் பிள்ளைக்கு தந்தையாகும் அப்பன் .!
கல்வி கற்க பள்ளிச்சென்றால்
கற்பை குடிக்கும் ஆசான்கள் .!
பதவி வெறியால் அப்பாவிகளின் உயிரை குடிக்கும் அரசியல்வாதி .!
காக்கிச் சட்டையை அணிந்துகொண்டு
காட்டுமிராண்டியாக காவலர்கள் .!
சொத்துக்காக பழகும் உறவுகள்
பணம் தான் உயர்வென்று நம்பும்
சுற்றத்தார் ..!
இவர்களுக்கிடையில் என் விழிகள்
எதையோ தேடுகின்றன ..!!
எதை எதை எதை ..?
இறுதியில் தான் அறிந்துக்கொண்டேன்
நான் தேடியது மானிடரை .
விடைபெறுகின்றேன் இறுதிவரை
கிடைக்கப் போவதில்லை என்ற
ஏமாற்றத்தோடு ...!