நீ இல்லாத என், நினைவுகள்

உன்னை இழந்ததால்....
உன்னுடன், செல்லாமலும்...
என்னிடமும், திரும்பாமலும்,
இடையில் துடிக்குதடி......
என் இதயம்!
உன்னை தேடி, தேடி.. அலைந்து காண முடியாமலும்.. என்னிடம் திருமப முடியாமலும், அந்தரத்தில் தனிமையாய் அலையுதடி.. என் தொலையாத நினைவுகள்.
அனு தினமும்... அந்தரங்கமாய்,
அழுகின்றன. காற்றை...
கைகளால். அணைத்தபடி நீயும்,
நேற்றைய கனவுகளை.. நினைத்தபடி நானும்,
இணைவது எப்படி?