கண்ணம்மா
கண்ணம்மா
வண்ணத்து பூக்களில்
பட்டாம் பூச்சிகள் அமர்ந்து
அழகுக்கு மெருகூட்டுவதுபோல்
என் கண்ணமையின் நெற்றியின்
கருஞ்சாந்து அழகூட்ட,
தடாகத்தில் தோன்றிய
செந்தாமரை போல் எந்தன்
கண்ணமையின் செவ்வுதடுகள்
அன்புடன் சிரித்தழைக்க,
சிப்பியிலிருந்து தோன்றிய
வெள்ளை முத்துக்கள் போன்றுந்தன்
பற்கள் பளீரென்று ஜொலிக்க,
துள்ளி விளையாடும் மீன்கள்போல்
உன் கண்கள் என்னை தீண்ட,
மழலையின் அருமையும்
வீணையின் இனிமையும்
ஒருங்கே இணைந்த பேரின்ப
உன் குரல் என்னை வாட்ட,
பாரதி கண்டெடுத்த கண்ணமா
நீ மறு பிறவி எடுத்துவிட்டாய்
இவ்வுலகில் என்னை வெல்ல
மீண்டும் நீ வந்துவிட்டாய்;
என் உள்ளத்தை வென்றுவிட்டாய்!
சம்பத்

