உண்மைக் காதல்

உண்மைக் காதல்
காசு பல செலவழித்து
கடற்கரைக்கு நாம் சென்று
கடலையை மென்றுகொண்டு
நள்ளிருட்டின் ஊடே
அன்பே ஆருயிரே
என் உயிரின் உள் மூச்சே
என்றெல்லாம் நான் கூறி
உடல் உன்னை நான் தழுவி
அன்புடன் அரவணைத்து
உள்ளாடைதனை உருவி
உறுப்புக்களை நான் உரச
சலனமற்று நீ உள்ளாய்
ஏனின்று என் அன்பே?
வழியதனில் எதிர்பட்ட
காவலன் முகம் சுளிக்க
ஏன் இப்படி இன்றென்னை
ஏமாற்றுகிறாய் என் உயிரே?

இறுதி முறையாக உன்னை உயிரூட்ட
முயற்சி நான் செய்வதனில்
'ஸ்டார்ட்' நீ ஆகவிடில்
வண்டி உன்னை வழியில் விட்டு
உன் தொடர்பை துண்டித்து
நடந்து நான் சென்றிடுவேன்
கிடந்திங்கே நீ மடிவாய்!

- A true bike lover's ordeal ;-)

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:32 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 606

மேலே