வருக குடியரசே -ரகு
எங்கள் நாடு
எங்கள் மொழி
என்றே பாடுவோம்
எங்கும் சமத்துவ
பூக்கள் தெளித்து
புன்னகை மேவுவோம்
குடி மையிலும்
குடியாட் சியிலும்
மேன்மை புகுத்துவோம்
கொள்கை நன்றே
கொள்வோம் என்றே
குடிமை பேணுவோம்
வளம் பொருந்திய
வாழ்நாள் மேவி
வறுமை வெல்லுவோம்
உழைப் பவர்தம்
உயர்வு நிச்சயம்
உரக்கச் சொல்லுவோம்
கடமை கண்ணியம்
கட்டுப் பாட்டில்
கவனம் கொள்ளுவோம்
அந்நிய நாடுகள்
அனைத்தும் வியக்க
அறிவியல் கற்றிடுவோம்
வேலை இல்லா
வேதனை களைந்து
வெற்றியை நாட்டிடுவோம்
தேசம் முழுதும்
திறம்படும் வண்ணம்
தேடலில் மூழ்கிடுவோம்
கொள்கை உயர
குடியும் சிறக்க
குடியரசை வரவேற்ப்போம் !
=========================
தளத் தோழர் தோழமைகளுக்கு
மனமார்ந்த குடியரசுதின வாழ்த்துக்கள் !
----------ரகு----------