செந்தழிழ்ப் பெண்

அழகிய கன்னிமகள்
முல்லையும் மல்லியும்
கருங்கூந்தலில் சூடி
இரோசா மலர்களைச்
சடையில் வைத்து
கதம்ப இதழ்களை – அதன்
நுனியில் தைத்து
தங்கம் போன்ற மெல்லுடலை
அழகான பாவாடை
தாவணியில் பூட்டி
ஒய்யாரமாய் நடந்து
செல்லுமழகு – நம்
செந்தழிழ்நாட்டு
நல்மங்கையர்கே
உரிய பேரழகு
எந்நநாட்டிலும்
காணக்கிடைக்காத
அழகு!