விண்மீனின் எச்சரிக்கை
விண்மீன் பிடிக்க எண்ணி
விரைவாக்கினேன் ஊர்தியை
நெடுந்தொலைவு நகர்ந்த பின்னும்
நெருங்கக்கூட இயலவில்லை
இயன்றவரை முயற்சித்தும்
அதன் வேகம் போகவில்லை
இயற்கையின் தொழில்நுட்பம்
அதிநவீனம் போல
ஏளனமாய் பார்த்துவிட்டு
ஏதோ ஒன்றை சொல்லியது
மொழிபெயர்ப்பு இல்லாவிடினும்
மொழிந்த வரி அறிந்துக்கொண்டேன்
" ஆடும் வரை ஆடு
கூடும் வரை விரைவாய்
நாடும் இடம் அடைவாய்"
இரைதேடி போனவனை
இரையாக்க சமூத்திரம் வரும்
தன் கல்வெட்டி எடுத்தவனை
களவாட எரிமலை எழும்
தன் புனிதத்தை கெட்டுத்தவனை
தேடி காட்டாற்று கூட்டம் எல்லாம்
வீட்டோரம் வருகை தரும்
மிதிபட்டு கிடந்த மண்ணும்
வாய்திறந்து வாரிக்கொள்ளும்
மிதமிஞ்சிய கோபம் கொண்டு
சூரைக்காற்று சுருட்டி விடும்
மழையோ ஓயாது பொழிந்து கொண்டு
ஒருபக்கம் பெருகிவிடும்
அன்னார்ந்து பார்க்க வைத்து
மறுபக்கம் கருக்கிவிடும்
அனல் கக்கும் சூரியனால்
பனிமலைகள் உருகிவிடும்
அன்பார்ந்த இனத்தோனே உம்மால்
உயிர்களெல்லாம் மடிந்துவிடும்
சூசகமாய் சொன்னதது
சிரித்தபடி நின்றதது
இனியேனும் திருந்தி விட்டால் இயற்கையோடு ஒன்றி விட்டால்
வருங்காலம் தழைக்குமய்யா
பெருங்காலம் நிலைக்குமய்யா