முக்கிய அறிவித்தல் - பொங்கல் கவிதைப் போட்டி

வணக்கம் தோழர்களே....

பொங்கல் கவிதைப் போட்டியின் முடிவுகள் சனவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தோம்....இன்று சனவரி முப்பது....!

இன்று.நாளை முடிவுகள் அறிவிக்க தொடங்கப்படும் என்பதை பேரார்வத்துடன் அறிவித்துக் கொள்கின்றேன் !

இருபத்தைந்தாம் திகதியே இறுதி தேர்வுகள் நடைபெற்று விட்டன.

பிறகு ஏன் இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்?

ஆம் தோழர்களே....

முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை பெருமதிப்பிற்குரிய நடுவர்களின் அர்ப்பணிப்புமிக்க போராட்டத்தின் விளைவில் அலசி ஆராயப்பட்டு மூன்று கட்ட தேர்வுகள் மூலம் சிறந்த கவிதைகள் பட்டியல்படுத்தப் பட்டாலும் இறுதி முடிவுகளை அறிவிக்க ஒரு சிறப்பு நடுவர்குழு தேவை என்ற எண்ணம் எழுந்தது !

அதனடிப்படையில் சிறப்பு நடுவர் குழு மூலம் இந்த படைப்புகளை தரம் பிரித்து தருமாறு "தன்னலம் கருதாமல் பொதுநலப் பணி புரிந்து தளத்தில் முத்திரைப் பதிந்து வைத்திருக்கும்" மதிப்பிற்குரிய தோழர் அகன் அவர்களிடம் வேண்டிக்கொண்டேன்....!

முதல் தடவை நான் அழைக்கும் போது கடுமையாக சுகயீனமுற்று காய்ச்சலோடு கைபேசியில் பேசியவர்...எந்தவொரு தப்பிக்கும் காரணத்தையும் (excuse ) கூறாமல் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமை எனக்கொரு முன்மாதிரி உதாரணமாய் இருந்தது !

சரி....யார் அந்த இறுதி முடிவுகளை எடுத்த நடுவர் குழு?

இந்தப் போட்டியினை ஏற்று நடாத்தியதில் பெரு மகிழ்ச்சியை அடைகின்றேன் இந்த நடுவர்களின் உள்வருகையால்...அவர்கள்....

இன்றைய மகாகவி----
ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள்

யுகபாரதி -
திரைப்பட பாடலாசிரியர்

முனைவர் . பா . ரவிக்குமார் -
(உலக கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்)

விழிகள் நடராஜன்
(எழுத்தாளர்)

என்ன தோழர்களே.....உங்களால் எழுதப்பட்ட படைப்புகளில் இந்த மாபெரும் நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டு மகுடம் சூடிக் கொள்ளப் போகும் அந்த ஒன்பது படைப்பாளிகள் யார் என்று அறிய ஆவலாய் உள்ளதா ?

இன்று மாலைவரை பொறுத்துக் கொள்ள முடியும் தானே ?

அன்புடனும் உற்சாகத்துடனும் நாங்களும் காத்திருகின்றோம் !

எழுதியவர் : விழாக்குழு (30-Jan-15, 8:07 am)
பார்வை : 298

மேலே