சுத்தி போடணும்
நம் காதலின்
புறணி பேச
கூடி நிற்க்கும்
நட்சத்திரங்கள்
நம் அந்தரங்கம்
இடையே
எட்டிபார்க்கும்
மேகங்கள்
மின்னல் வெளிச்சம்கொண்டு
மழைநீராய்
வழிந்தோடும்
மேகத்தின் கண்ணீரும்
நம் காதல் கண்ட
ஆற்றாமையால்
உன் பேரழகின்
பொறமையால்
சூட்டெரிக்கிறது
சூரியனும்
நம்மை
சுத்தி போட சொல்லனும்
காணாத கண்கள்
நம் காதல்மீது கொண்டதால்
பாண்டிய இளவல் (மது.க )

