கொடி இடை கொண்ட கொடிமுல்லை 555
அழகே...
உன்னை தொடரும் உன்
நிழலோடு நான் நடக்கும் வேலை...
விண்ணில் பறக்கிறேன்
நான் மட்டும்...
நீ கையசைத்து உன்
தோழிகளோடு பேசும் வேலை...
காதல் மழையில்
நனைகிறேன்...
நீ செல்ல கோபம்
கொள்ளும் போது...
என் கைபேசியை
மறைக்கிறேன்...
நான் தூரத்தில் இருந்தாலும்
என்னை தொடும்...
நீ கொடுத்த
பறக்கும் முத்தம்...
இருட்டைவிட வெளிச்சம்
எனக்கு ரொம்ப பிடிக்கிறது...
உன் நிழலோடு என் நிழல்
எப்போதும் சேர்ந்து இருப்பதால்...
என் மீசைக்கு
சொந்தக்காரி நீ...
உன் கூந்தலுக்கு
சொந்தக்காரன் நான்...
கொடிஇடை கொண்ட
கொடிமுல்லையே...
காத்திருக்கிறேன் நான்
உன் கரம் பிடிக்க.....

