இப்படிக்கு மனம்
தினம் காலை அவன் குறுஞ் செய்தி ,
இடை இடை அவன் அழைப்புகள் ,
இரவில் ஒரு நகையாடலின் பின் உறக்கம் ,
இன்றியமையாமல் வேண்டும் என்று நான் வேண்டுவதும் இவையே !
இனிதாய் தொடக்கத்தில் தொடர்ந்த இவை ,
நாட்கள் கடக்க, சராசரியாய் தோன்றியதாலோ என்னவோ ?
என்னவன் அவனும் தொடர மறக்கிறான்.
தொலைவில் உள்ள நானோ தொல்லையோ என்று எனக்கும் தோன்ற !
இப்படிக்கு ,
மாற்றங்களை ஏற்காமல் மருளும் மனம் !