நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்

நம் தேசத்தின் மீது
நேசம் வைத்து
நம் தேசத்தை
வல்லரசாய் வளர்ந்திட...

நாம் வாழ்ந்திட
நாடும் போற்றிட
உலகம் புகழ்ந்திட
நிம்மதி அடைந்திட...

குடியை ஒழித்து
லஞ்சத்தை ஒழித்து
நாம் அனைவரும் இணைந்து
நல்லாட்சி அமைத்து..

ஒற்றுமை வளர்த்து
தமிழனாய் இருந்து
தாயகம் சிறந்து
இன்பங்கள் கிடைத்து..

நாம் தேசம் போற்றுவோம்
வளர்ப்போம் நம் உடமை
நம் தேசம் என்று
ஒற்றுமையாய் ஒரு மனதாய்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (1-Feb-15, 11:27 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 114

மேலே