நெஞ்சு பொறுக்குதில்லையே- மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

பள்ளிப் பிஞ்சுகளின் ஓலங்கள்
பயத்தில் மரண அலறல்கள்..!!
எதுவரை உயிர் இருக்கும்
எனத் தெரியாமலே உடல் தெறிக்கும்..!!
கோழைத் துப்பாக்கிதாரிகள்
சிறுவர்கள் மேல் ரத்த வெறிகள்..!!
அனுதாபம் இல்லாத நிமிடங்கள்,
அங்கே இரக்கமற்ற பல மிருகங்கள்..!!
குழந்தைகள் மீதான யுத்தம்
யார்மீது சுமத்த போர்க்குற்றம்..?
பச்சைப் பிஞ்சு உயிர் குடிக்கும் தாகம்
உலகை உலுக்கியதாம் இச்சோகம்..!!!
நீதிச் சிலம்புகளில் உயிர்க் கடன்,
அதை உடைத்து என்ன பயன்..??
வெறியில் வேண்டாம் கண்ணுக்கு கண்,
பழிக்குப் பழி உயிரென்பது இங்கே வீண்..!!
திமிர் பிடித்த யுத்த முனைகள்,
கற்பனைக்கு எட்டாத வினைகள்..!!
தீவிரவாத நெடி தாங்கவில்லையே,
அறத்தின் நெஞ்சும் பொறுக்குதில்லையே..!!