கல்பனா சாவ்லா -12வது ஆண்டு நினைவிற்காக

குடும்பத்தில் கடைக்குட்டி
வீரத்தில் இவள்
பெண் புலிக்குட்டி
புறப்பட்டாள் விண்ணை நோக்கி
புரிய நினைத்தாள்
சாதனை பல
போற்றினர் புவிதனிலே
பூ இவளின் புது
துணிவு தனை .
தேடி சென்றதன் தீர்வு தனில்
சிரமத்துடன் வெற்றிப் பெற்றாள்.
வெற்றிக்களிப்பில் தோழர்களோடு
பூமி நோக்கி பறந்து வந்தாள்
கண்ணில் படும் தூரமதில்
கன்னியவளின் வருகை அது
அன்னையோடு அகிலத்தரும்
அவள் வரவிற்காய் காத்திருக்க
கண் இமைக்கும் நேரமதில்
கலைந்ததுவே கனவு அனைத்தும்
சிதறியதே விண்கலமும்
கருகியதே கன்னி உடல் .
பன்னிரண்டு வருடம் தான்
பறந்தோடி போனாலும்
பெண் இவளின் வீரம் மட்டும்
கவி பேசும் எந்நாளும் ...!!