பிறந்த நாள் வாழ்த்து-காதல் கவியரசருக்கு
காதல் கவியரசர்-பல
தங்கைகளுக்கு அண்ணன்-இத்
தளத்தின் இராஜகுமாரன்!
உன் பொறுமை கண்டு
வியந்த நாட்கள் பல;
உன் நம்பிக்கை கண்டு-நான்
திடம் பெற்ற நாட்கள் பல-உன்
கவியில்
காதல் வலியை உணரவைப்பவன்!
உலகை
அடக்கத்தால் ஆள்பவன்-உன் தங்கைகளை
அன்பினால் ஆள்பவன்!
உன்
அமைதியான பேச்சு அனைவரையும்
அமைதிப்படுத்திவிடும்!
உன்னால் முடியும் என்று
உணரவைத்தது உன்
Y Can't U Educational Social Service !
என் வகுப்பின்
முன்மாதிரி நீதான் !
உன்னைப்பெற்றதால் - தினம்
உவகை கொள்கிறது
உன் கெட்டுபட்டிக் கிராமம்!
உம்மை வாழ்த்திட
என் சொற்கள் போதாது!
மனம் நெகிழ்ந்து
மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் அண்ணா-நீ
இராஜகுமாரனாக வலம் வர
இறையருள் வேண்டுகிறேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

