தீவிரவாதி

தீவிரவாதி
என் பெயர் : சித்திக். வயது : 21. நிறம் : சிவப்பு. படிப்பு B.B.M.
வேலை : வேலை தேடுவது. நான்கு மாதமாய் தேடியும் எந்த திக்கிலும் வேலை (சித்திக்)கவில்லை. எங்கு போனாலும் முன் அனுபவம் இல்லை என துரத்தினர். அனுபவத்தை திரட்ட விற்பனை பிரதிநிதியாக ஆக நான் சேர்ந்த்தது தான் இந்த “SUGAM MATTRESS AGENCY”.
அது ஒரு சின்ன Distributor company. அதன் விற்பனை பொருள் SORKAM MATTRESS LTD கம்பெனியின் விதவிதமான மெத்தைகள். தென் சென்னை முழுவதும் சொர்க்கம் மெத்தையின் விநியோக உரிமை எங்கள் சுகம் மெத்தை AGENCY க்கு மட்டுமே.

விற்பனை உலகில் உயர்ந்த இடத்தை பிடிக்க தெரு தெருவாக சித்திக்உலா செல்ல முடிவு செய்தேன். கையில் ஒரு file, அதில் நிறைய broachers . அதில் பல கோணங்களில் எடுக்கப்பட்ட சொர்க்கம் மெத்தையின் புகைப்படங்கள். முதல் நாள் சண்முகம் சாலையில் வீடு வீடாக பிரவேசித்தேன் ஆனால் இந்த SALES REP ஐ ஏதோ GIRLS RAPE செய்ய வந்தவன் போல விரட்டினார்கள். சில மனிதர்கள் கேவலமாக குரைத்தனர். ஆனால் அவர்கள் வளர்த்த நாய்கள் என்னை பார்த்து வாலாட்டின. ஒருவேளை என் பையில் பிஸ்கட் இருக்கும் என நம்பி இருக்கலாம். சிலர் கதவின் நடுவில் இருக்கும் Eye view mirror வழியாக பார்த்து வீட்டில் பெரியவர்கள் இல்லை என குரல் கொடுப்பர். நான் என்ன ஜாதகமா கொண்டுவந்திருக்கிறேன் என் மனதிற்குள் சொல்லிவிட்டு அடுத்த வீட்டை எதிர்கொள்வேன். ஒரு வீட்டில் சின்ன குழந்தை கதவை திறந்தபடி “அம்மா யாரோ ஒரு uncle வந்திருக்கார்” என்றது. “ரோட்டில வரவன் போறவனை எல்லாம் uncle னு சொல்லாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்றது” உள்ளிருந்து வந்தது ஒரு அம்மாவின் வெறுப்பு குரல். ஒரு தொழுநோயாளி போல் விரட்டபட்டேன் தெருமுனைக்கு. இனி இந்த தொழிலே வேண்டாம் என முடிவு செய்யும் போது தான் கண்டேன் அந்த அற்புத மனிதரை.

நெற்றியில் கூலிங்க்ளாஸ், கண்களில் ஒரு மலர்ச்சி, முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் நின்றிருந்தார் அந்த வாலிபமுதியவர். வயது 60 இருக்கும். என்னை பார்த்ததும் என்ன sales man ஆ என்றார். தலை ஆட்டினேன். என்னை மேலும் கீழும் ஆராய்ந்து விட்டு “உள்ளே வாப்பா” என்றார்.
வாசற்படியை கடக்கும் போது கண்ணில் பட்டது அந்த போர்டு.
A.BASKARAN , Retd. தாசில்தார், பட்டுகோட்டை. இன்று முதல் போணி நிச்சயம். நம்பிகையுடன் உள்ளே நுழைத்தேன். அவரின் மொத்த குடும்பமும் லண்டனில் செட்டிலாகிவிட்டனர். ஒரு சில காரணங்களுக்காக இவரை தனியாக தவிக்கவிட்டு சென்றனர் என்பது அவர் பேச்சிலே தெரிந்தது.
எனக்கு வாழவேண்டிய வயசுல வெயில்ல வாடறவங்களை பாத்தா வருத்தமாக இருக்கும் என ஆரம்பித்தார். சாப்பிட என்ன வேணும் மோரா? இல்லை பீரா? என்று கூலா fridge ஐ திறந்தார்.
“சார் யாருமே என்னை வாசற்படியை மிதிக்கவிடலை, நீங்க மட்டும்தான் வரவேற்பறை வரை அனுமதிச்சு இருக்கிங்க” என்றேன்.
“நீ படுக்கை அறை வரை வந்தா கூட நான் தப்பா நினைக்கமாட்டேன்” என்று சிரித்தார். அவரின் நகைச்சுவையை ரசித்தபடி என் ப்ரோசெர்யை அவரிடம் நீட்டினேன். விளம்பரத்தாளை உற்று பார்த்தார். அழகான ஒரு மெத்தை. அதில் மனதை கவரும் மாடலிங் பெண் ஒருத்தி நித்திரையில் கிடந்தாள். கீழே மெத்தை கம்பெனியின் பெயர் பெரிய எழுத்தில் சொர்க்கம். அதன் கீழே சின்ன எழுத்தில் ஒரு ஸ்லோகன் “நிலைத்திருக்கும் இரவு முழுவதும்”

“சார் இதில படுத்தீங்கன்னா ரொம்ப மெத்துனு இருக்கும். சோர்வே இல்லாம சொர்க்கத்தில் மிதப்பதுபோல் அனுபவம் கிடைக்கும். விலையும் மிக மலிவுதான். ஒருமுறை படுத்து பாருங்க, திருப்த்தி இல்லீன்னா பணம் வாபஸ். எங்கள் சுகம் கம்பெனி உங்கள் வீட்டு படுக்கைஅறைக்கு சொர்கத்தையே கொண்டுவரும். என் விற்பனை தந்திரத்தை கற்பனை மந்திரமாய் ஓதி கொண்டிருந்தேன்.
“தம்பி என்னப்பா ரேட்? என்றார் .
“சார் ஜஸ்ட் 10000 தான்”.
“என்னப்பா ஒரு ராத்திரிக்கு வாடகை பத்து ஆயிரமா?”
“வாடகை இல்லை சார், நிரந்தரமா உங்களுக்குதான்”.
“நிரந்தரமா? அப்ப என் பொண்டாட்டிய என்ன செய்ய ?”
“சார் நீங்க பேசறுது மெத்தைய பத்திதான?” என்றேன் .
“இல்லப்பா அந்த மெத்தைல படுத்து இருக்கிற பொண்ணு சொர்கத்தை பத்தி” என்றார்.
அவர்பெயரில்அத்தனை A இருப்பது அப்போதுதான் புரிந்தது.
அவரை உதைக்க பரபரத்தன கால்கள்.வயதை கருத்தில் கொண்டு, அவரின் காதை நன்றாக திருகினேன்.அவரின் வாய் அலாரம் ஓயும்முன் வாசற்படியை கடந்தேன்.கிழவனேள்ளாம் என்னை மாமாவாக நினைக்கிரானே இனி இந்த சேல்ஸ்மேன் வேலையே வேணாம்,எதாவது ஒரு ஆபீசில் 15000 க்கு கிளார்க் வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்தபடி மின்சார ரயிலில் பயணம் செய்யும் போதுதான் கண்ணில்பட்டது அந்த விளம்பரம்.

ANY DEGREE PASS OR FAIL
சம்பளம் 20000 TO 50000
ESI , PF , CANTEEN வசதி உண்டு
தொடர்ப்புக்கு : பன்னீர்செல்வம் 9104038167
உடனடியாக APPLY செய்ய மனம் விரும்ப காரணம் அதன் சம்பளம் மட்டுமல்ல அதன்கீழ் உள்ள குறிப்பு”முன் அனுபவம் தேவை இல்லை”
அட்ரஸ் தேடி கண்டுபிடித்தேன். அது ஒரு சின்ன அறை, சுவரில் அப்துல் கலாம் போட்டோ, இரண்டே நாற்காலிகள், அதில் ஒன்றில் ஐம்பது வயதை கடந்தவர் அமர்ந்து இருந்தார். என்னை பார்த்ததும் என்ன வேண்டும் என்றார்.
ஸார் பன்னீர்செல்வம் ? என்று இழுத்தேன்.
“நான் தான் என்ன விஷயம்?”
“ஸார் உங்க விளம்பரம் பார்த்தேன்” என ஆரம்பிதேன்.
“தம்பி உன் பேரு , படிப்பு, ஊரு பத்தி சொல்லு”
“சித்திக் , B.B.A , அயனாவரம் சார்”
“நல்லது, என்ன மாதிரியான வேலை பிடிக்கும்”.
“மார்க்கெட்டிங் தவிர எந்த வேலையும் ஒ.கே சார்”
“ட்ரைன்ல குண்டு வைக்கணும் முடியுமா?”
“சார்” என்று அதிர்த்தேன்.
“பின்ன குறிப்பா இந்த லைன்னு சொன்னாதான் ஏற்பாடு பண்ணமுடியும்”.
“அலுவலகத்தில் வேலை செய்ற மாதிரி இருந்தா நல்லா இருக்கும் ஸார்”
“சரி நாளைக்கே உனக்கு இண்டர்வ்யூ, கிட்டத்தட்ட உனக்கு வேலை கிடைத்தமாதிரிதான்” என்றார்.
“எப்படி சார் சொல்றீங்க?”
“உன் கண்ண பார்த்தே உள்ளத்த படிச்சிறுவேன்.அவ்வளவு அனுபவம்” என்றார்.
சார் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் நான் தரணும்?
பலமாக சிரித்தார்.“கம்பெனி எனக்கு தெரிஞ்சவருது.விசுவாசம் ரொம்ப முக்கியம். என்ன போலீஸ்காரங்களோட கண்காணிப்புக்கு மத்தில வேலை பார்க்கணும்”
“எங்க சார் வேலை?”
“மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல பிரைவேட் கார்கோ டிவிசன்ல வேலை.நாங்க கொடுக்கிற சில assignmentட தட்டாம செய்யணும்”.
“சார் எனக்கு முன்னனுபவம் எதுவும் கிடையாது” என்றேன்.

“தம்பி நாமெல்லாம் என்ன அனுபவதோடவா பொறந்தோம்.அதுவா நம்மை தேடி வரும். பொண்ணை பெத்தவங்க மாப்ளைக்கு எதாவது முன் அனுபவம் இருகான்னு கேட்டா பொண்ணு தர்றாங்க? இல்ல திருட்டு அனுபவம் நிறைய உள்ள மனுஷன தொழில்ல பார்ட்னரா சேர்த்துக்க முடியுமா?”
“கவலைபடாதே எங்கூட சேர்த்துடீள இனிமே உனக்கு இந்த ஊரே விசாரிக்கிற அளவுக்கு அனுபவம் கிடைக்கும்”.
“சரி நாளை காலைல 6.00 மணிக்கு ஏர்போர்ட் விசிட்டர் ஹாலில் இடதுபக்க மூலைல கிரீன் ட்ரீ அப்படினு ஒரு பிரைவேட் Lounge இருக்கும். அங்க வெயிட் பண்ணு. கந்தசாமினு ஒருத்தர் வருவார்.உன்னுடைய எம்ப்லோய்மேன்ட் கோடு No. RDX 4343. இதை சொன்ன உடனே உன்னை இன்டர்வியூக்கு கூட்டிகிட்டு போவார். கடைசீல நான் வந்து உன்னை பார்க்கிறேன். வேலை கண்டிப்பாக கிடைத்திரும்” என்றார். எழுந்தேன்.
நான் கிளம்பும் போது என் கையை பிடித்து ஒரு பார்சலை தந்தார்.
“என்ன சார் இது என்றேன்.
“பலாப்பழ அல்வா கந்தசாமிக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார் . “மறந்துடாம இதை அவன் கிட்ட கொடுத்திடு” என்றார் பன்னீர்.
நான் “அல்வாவை ஏன் சார் இன்சுலேட்டட் சீல் பண்ணிஇருக்கீங்க” என்றேன்.
“கேள்வி எல்லாம் கேட்க கூடாது. சொன்னதை செய்” என்றார்.

மறுநாள் உளவுதுறையின் ரகசிய செய்தியை அடிப்படையாக வைத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து விமான நிலையங்கலுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. “விமானத்தை கடத்தி தகர்க்க தீவிரவாதிகள் சதி எனவே 5 அடுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும்”
காலை மணி 6
விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பில் போலீஸ் உஷாராக இருந்தனர். விமானநிலையத்தின் அருகில் மெட்ரோ ரயில்பணிகள் நடந்து கொண்டிருபதால், GST நெடுஞ்சாலைக்கும் விமானநிலைய ஓடுபாதையை ஒட்டிய மதில்சுவருக்கும் மத்தியில் ஒரு பெரிய பள்ளம். அதில் இருந்து ஒரு உருவம் மெல்ல மெல்ல பதுக்கியபடி, மதில்சுவரில் ஏறி ஓடுபாதையின் உள்ளே தாண்டி குதித்தது.
அதே சமயம் விமானநிலையத்தின் நுழைவாயிலை கடந்து பன்ணீர் சொன்ன Lounge ஐ நோக்கி நடந்துகொண்டிருந்தான் சித்திக். இடையில் அவனை வழிமறித்தது போலீஸ்.
“உன் பேரு என்ன?”
“சித்திக் சார்”.
“எங்க போற?”
“ஸார் எனக்கு கார்கோ ஆபீஸ்ல இன்டர்வியூ அங்கதான் போறேன்”.
“அது என்ன பார்சல்?”
“பலாப்பழ அல்வா சார், பன்னீர் சார் கொடுத்தது” என்றான். கையில் இருந்த பார்சலை பிடுங்கி ஸ்கேனர் கன்வேயரில் நுழைத்தனர் போலீஸ்.
உள்ளே சில ஒயர்களும் பேட்டரியும் மினி கடிகாரமும் கணினியில் தெரிந்ததும் போலீஸ் உசாரானது.
இதை சற்றும் எதிர்பார்க்காத சித்திக் திகைத்து போனான். கோழியை போல் போலீசால் அமுக்கப்பட்டான்.
மறுபுறம் சுவர் ஏறி குதித்த உருவம் மெல்ல மெல்ல jet Airways விமானத்தை நோக்கி நகர்ந்தது. இதை கட்டுபாட்டு அறையின் கண்காணிப்பு கேமராவில் பார்த்த காவலர்கள் அவனையும் சுற்றிவளைத்தனர். போலீசின் கவனிப்பில் உளறினான் அந்த ஆசாமி. “என்னை இங்கே வர சொன்னதே சித்திக்னு ஒரு பையன் தான். கிரீன் ட்ரீ Lounch கு போன இப்ப அவன பிடிக்கலாம்”
அவனை இழுத்துக்கொண்டு போய் சித்திக் முன் நிறுத்தினர். அந்த ஆசாமியை பார்த்ததும் சித்திக்க்கு அதிர்சியாக இருந்தது. அது வேறு யாரும்மல்ல. நேற்று அவனிடம் பலாப்பழ அல்வா கொடுத்து அனுப்பிய அதே பன்னீர்தான்.
“பன்னீர் சார் இங்க என்ன நடக்குது? என்னையும்,உங்களையும் ஏன் போலீஸ் பிடிச்சிருக்கு. நானும் நீங்களும் என்ன தப்பு பண்ணினோம்”.
பதில் ஏதுமின்றி மௌனமாக நின்றிருந்தார் பன்னீர். போலீஸ் இருவரையும் காவல் வாகனத்தில் ஏற்றி ஐ. ஜி அலுவலகம் விரைந்தனர்.
இருவரையும் தனித்தனி அறைகளில் அடைத்து விசாரணையை துவக்கினார் ஐ. ஜி . அப்போது பன்னீர் இருந்த அறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவர் சார் “இவன் தீவிரவாதி இல்ல” என்று கத்தினார். இன்ஸ்பெக்டரை பார்த்து திரும்பிய ஐ.ஜி அப்படீனா இவன் யார்?
இன்ஸ்பெக்டர் பன்னீரை கை காட்டியபடி “சார் இவன் ஒரு மனநோயாளி” என்றார்.
“உங்களுக்கு எப்படி தெரியும்? இதுக்கு முன்ன இவன பார்த்து இருக்கீங்களா?”
“சார் இவன் என் கூட பொறந்த சகோதரன்”. என்றார் இன்ஸ்பெக்டர்.
அறை முழுவதும் அமைதி நிலவியது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அந்த கொடுமையை கூற ஆரம்பித்தார்.

“சார் இவர் ஒரு ஆசிரியர்.2010ல பெங்களூர்ல நடந்த ஒரு குண்டுவெடிப்புல இவரோட மனைவி, குழந்தைகள் எல்லோரும் இறந்துட்டாங்க. மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்ததில சித்த பிரம்மை ஆயிட்டாரு. உங்க காவல்துறையால இந்த தீவிரவாதத்தை அழிக்கமுடியாதா? னு என்கிட்ட அடிக்கடி கேட்பார். அந்த கடவுள் நினைத்தாலும் முடியாது ஏன்னா?. ஒரு கேன்சர் செல் மாதிரி இது பரவ எதிரி நாடுகளும், சில தீவிரவாத இயக்கங்களும் பெரும் அளவில் பணம் கொடுத்து, வறுமையில் வாடும் வாலிபர்களை மூளை சலவை செய்கிறது. இதுல கொடுமை என்னான்னா? வளர்த்திவிட்டவனையே இப்ப தீவிரவாதம் அழிச்சிகிட்டு இருக்கு. இது நம்ம சமூகத்தோட ஒரு சாபக்கேடு என்றேன். இல்ல இதுக்கு நான் ஒரு முடிவு கட்டறேன் என்று வீட்டை விட்டு போனவர் திரும்பவே இல்லை. 2 வருசத்துக்கு பிறகு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் வந்தது. உங்கள் சகோதரனை நீதிமன்ற உத்திரவுபடி எங்களோட கஸ்டடியில் வச்சு சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம்னு டீன் எனக்கு போன் பண்ணினார். போய் பார்த்தேன். டாக்டரிடம் விசாரித்தபோது போன மதம் இவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நடுவழியில் அவுரா எக்ஸ்பிரஸ்சை நிறுத்தி குண்டு வட்சுட்டாங்கனு கூச்சல் போட்டதில் எல்லாரும் ஓடிட்டாங்க.போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி இப்ப நீதிமன்றம் மூலமா இங்க இருக்கார் “ தீவிர மன அழுத்தம் அவர இந்த நிலைமைக்கு ஆளாக்கிரிச்சு. நல்லா பேசுவார், தெளிவா பழுகுவார். சட்டுனு சந்தரமுகி ஜோதிகா மாதிரி , அந்நியன் ரெமோ மாதிரி மாறிறுவாருன்னு டாக்டர் சொன்னார். அடிக்கடி போய் பார்ப்பேன். அப்புறம் 1 வருசத்துக்கு முன்ன அங்கிருந்து தப்பிச்சு போனதா தகவல் வந்தது. அதுக்கு பிறகு இப்பதான் இங்க பாக்றேன். சொல்லி முடித்தார் இன்ஸ்பெக்டர்.

சித்திக்கை போலீஸ் விடுவித்தது. பன்னீரை பார்த்து பயந்தபடியே நகர்ந்தான். அவனை பார்த்து சிரித்தார் பன்னீர். என்ன தம்பி அனுபவம் இல்லைனு சொன்னயே இது போதுமா ?
பத்தலைன்னா சொல்லு அடுத்த வாரம் கோடியாகரைல ஒரு assignment இருக்கு. சொல்லி சிரித்தார் பன்னீர்.

முகத்தில் வெந்நீர் ஊற்றியது போல் இருந்தது சித்திக்கின் அனுபவம்.

எழுதியவர் : ஸ்ரீனி முரளி (1-Feb-15, 10:07 pm)
Tanglish : theeviravathi
பார்வை : 225

மேலே