வரலாற்று யாத்திரைகள் 2- ஒரு பக்க கதைகள் -
” வேண்டாம் கரிகாலா! இது பழிவாங்குற நேரமில்ல.. நம்ம துப்பாக்கி சுட வேண்டியது இவரை இல்ல..” ஆண்டர்சன் கரிகாலனிடம் கெஞ்சி கேட்கிறார்.
“ எப்படி அண்ணா.? எப்படி.. இவரு அனுப்பின டீம் தான நம்ம காட்டுல இருக்கிற பொண்ணுங்கள வேட்டையாடிச்சு.. இவரு ராஜதந்திரமா ..அந்தரங்கமா காட்டு இலாகா போலீஸ்கிட்ட நம்மள மாட்ட வைக்க முயற்சி பண்ணுறாரு.. முடியாது அண்ணா... முடியவே முடியாது அவர போட்டுத்தள்ளினா தான் என் மனசு ஆறும். அவங்க ஊருல இப்போ எலெக்ஷன் டைம்.. சரியான டைம். இப்ப அடிச்சா.. அங்க ஊரே கதிகலங்கும். நம்ம மேலயும் பயம் வரும் “
“ அய்யோ தம்பி... போராளியா இருந்தா, புத்திசாலியா இருக்கனும்.. புத்திசாலியா இருந்தாலும் சில நேரத்தில பொறுமையாவும் இருக்கனும். அந்த ஊரு பிரசிடெண்டை கொன்னுட்டா.. அப்புறம் அங்க இருக்கிற நம்ம ஆளுங்களே நம்மள வெறுத்துடுவாங்க. இந்த காட்டுல நம்ம ஜனங்க சந்தோஷமா வாழனும்னா, . இந்த காட்டுல கட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கும் அந்த அட்டுழிய ஜாதிக்கார கும்பலிடமிருந்து நமக்கான இடத்தை மீட்டே ஆகணும் . அதுக்கு அந்த பிரசிடெண்ட் ஊர்ல இருக்கிற நம்ம ஆளுங்க சப்போர்ட்டும் , அரசியல்காரங்க உதவியும் வேணும் தம்பி.. அவசரப்படாதே.... “
ஆண்டர்சன் வரப்போகும் பின் விளைவுகளை பற்றி கரிகாலனிடம் எடுத்துரைக்கிறார்.
“ அண்ணா. மன்னிச்சிடுங்க.. நான் ஒத்தக்கண் ஜீவாவையும் கூட அவன் தங்கச்சி வேணியையும் அந்த ஊருக்கு அனுப்பிட்டேன். இன்னிக்கு அந்தில வேணி மனிதவெடிக்குண்டா போயி ப்ரெசிடெண்ட் காலுல விழுந்து. ..குண்டு வெடிக்க செய்வா.. அப்போ டமால்.... ஹா ஹா..
நம்ம மேல இந்த உலகத்திற்கே பயம் வரணும். பயம் பயம் இருக்கனும் அண்ணா... “ கரிகாலன் விடாப்படியாக கொந்தளிக்கிறான்.
“ அந்த பயம் சரியான கோணத்தில இருக்கனும் தம்பி.. துப்பாக்கி தூக்கிட்டோம் சரி. . தூக்கின காரணமும் சரி. ஆனா. யாரை.. என்ன தேவைக்கு , எந்த நேரத்தில சுடணும்ன்னு ஒரு கணக்கு இருக்கு பா.. இதுக்கு பேரு போராட்ட சாதுரியம்.. !!
... நம்ம இனம் நல்ல இருக்கனும்ன்னு நினைக்கிற ..ஆனா. நம்ம இனத்துக்கு ஆதரவும் வேணுமின்னு நினைக்கல.. பெரிய புரட்சின்னு பேருல பெரிய தப்பு பண்ணுற. என்னமோ பண்ணு.. ஆவது ஆகட்டும்” மனம்வெறுத்தவராக ஆண்டர்சன் பாலா தன் அலைப்பேசியை எடுத்து எதையோ தேடுகிறார்.
--------------------
அந்தி சாயும் நேரம் ...!
வேணி தன் இடுப்பில் வெடிக்குண்டுகளை நிரப்பி, ப்ரெசிடெண்ட்க்கு அருகில் செல்கிறாள். ப்ரெசிடெண்டுக்கு வணக்கம் வைத்து .. அவர்.. காலில் விழ .................போகும் .. அந்த நொடியில்................. ஒற்றைக்கண் ஜீவா ஒடோடி வந்து ....................வேணியில் வயிற்றில் கைவைத்து....
” வேணி............... நீ மூழ்காம இருக்கம்மா.. குனியாதே.... ? நம்ம தலைமுறை நல்லா இருக்கனும்ன்னா.. இவர் கால்ல விழந்தா அது நாசமா போயிடும். கரிகாலன் அண்ணாகிட்ட நான் பேசிக்கிறேன். வாம்மா..”
---------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.