ஆதலால் காதல் செய்க - மண் பயனுறவேண்டும் கவிதைப் போட்டி

என்னை வென்றவள்:

இது தான்
வாழ்வென்றிருந்த எனக்கு
இதுவும் உன்
வாழ்க்கை தான்-என
வந்தவள் நீ!

உடன்
வந்த நாள் முதல்
இந்நாள் வரை
இன்னல்கள் பல
கண்டவள் நீ!
எனினும்,
உன்
மகிழ்ச்சியில் மட்டும்
எனக்கு சமபங்கு
தந்தவள் நீ!

பல
குழப்பத்தின் போது-என்
தலைகோதி ஆறுதல்
அளித்தவள் நீ!

முறைத்துப் பேசும் போது
சிரித்துப் பேசி-என்சினம்
தணித்தவள் நீ!

நான்
நோய் படும்போதெல்லாம்
தாயாகி-உன்துயில்
துறந்தவள் நீ!

என்
உறவை உனதாக்கி
எந்தன் உள்ளம்
வென்றவள் நீ!

எந்நிலையிலும்,
இவ்வீடன்றி வேறொன்று இல்-என
உன் இல்லறம்
மறந்தவள் நீ!

இனியொறு
பிறவிக் கண்டாள் அதில்-வேண்டும்
மகளாக நீ!

உனக்கு
அன்பு ஆதரவு எனும்-இன்ப
உணவூட்ட வேண்டும்
தாயாக நான்!

எழுதியவர் : பிரசாந்த் G (3-Feb-15, 2:07 am)
பார்வை : 103

மேலே