தீவிரவாதமும் தீவிரவாதியும்மண் பயனுற வேண்டும்
தீவிரவாதமும் தீவிரவாதியும்......
திறாணியற்றவன் கையிலெடுப்பதுதான் தீவிரவாதம்
தன் மூளையை முடமாக்கி
மூன்றாம் கட்டவனின் மூளையாகும்
முட்டாள் தான் தீவிரவாதி
நீ ஒரு ஆண் மகனாக இருந்தால்
உன் அன்பினால் ஆட்சி செய்யடா
அடிமையாகிறோம் உன்னிடம்
அதிகாரத்தையும் அணு குண்டுகளையும் காட்டி
அழிக்க நினைக்காதே அப்பாவி மக்கள் எங்களை
எங்கள் மதராசப் பட்டினத்தையே
மரண ஒலமாக்கினாயடா மானங்கெட்டவனே
என் உயிரினும் மேலான தாய் தமிழகத்தையே
தடதடக்க வைத்தாயடா தரங்கெட்டவனே
தமிழகம் என்ன உனக்கு தாரை வார்த்தா கொடுத்துள்ளது
தவிடு பொடியாக்க தவிக்கிறாய்
தன்னலம் கருதா தலைமகன்கள்
வாழ்ந்த பூமியட எங்கள் தமிழகம்
அன்பு நிறைந்த அழகான பூமியடா
எங்கள் தமிழகம்
அஞ்சா நெஞ்சர்கள் ஆட்சி செய்த பூமியடா
எங்கள் தமிழகம்
எங்கள் பாட்டன் பாண்டிய மன்னனின்
படை வாழ்ந்த பூமியடா
எங்கள் தமிழகம்
உன் சுயநலத்திற்காக
சுவாதியை சுட்டெரித்து விட்டயடா......
நான் கேட்கிறேன்
சுவாதி என்ன உனக்கு
அங்காளியா? இல்லை பங்காளியா?
இப்படி பழிவாங்கி விட்டாயடா படுபாவி
பூத்து குலுங்க போகும் புது மணப்பெண்ணை
புதைகுழியில் தள்ளி விட்டயடா புத்திகெட்டவனே
மத்திய இரயில் நிலையத்தில் மரணம் தழுவிய
மங்கையே உனக்கு மௌனிக்கிறேன் ஒரு நிமிடம் மனமுவந்து........
ஈவு இரக்கமற்ற இரும்பு மனிதா
இரு கரம் கூப்பி கேட்கிறேன்
இனி வேண்டாம் இது போன்ற இழிவுச் செயல்......
----------------------அரி.அன்பு--------------------------------------