எந்தன் மனமே

இசை வந்த திசை தேடி
ஆர்வமுடன் நான் ஓடி
உன்னை பார்த்த பொழுதினிலே
கரைந்தேன் நானே

இலைகளிலும் நடந்துவிட்டேன்
காற்றுடன் நான் இலகிவிட்டேன்
தரை ஏது வானம் ஏது
அறியா நடந்தேன்

உயிருக்குள்ளே உயிறருக்க
உடனுக்குடன் செயலிழந்தேன்
வலி வகைகள் காதலினில்
கண்டேன் இன்னொடி

விழி விழிம்பில் நீர்வீழ்ச்சி
இருக்குது என் மனம் சாட்சி
எங்குமில்லை தூரம் போச்சி
எந்தன் மனமே

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (3-Feb-15, 8:45 pm)
Tanglish : yenthan maname
பார்வை : 65

மேலே