படித்ததில் பிடித்தது முகநூலிலிருந்து
தோகை விரித்தாடும் மயில்
போல, நானும் உன்னைக் கண்டு துள்ளியாடுகிறேன்.. என்னுள் உறங்கி கிடக்கும் குழந்தை எப்பொழுதும் உன் ஸ்பரிசத்தால் உடல்
நனைகிறது.. ஒவ்வொரு முறையும் நீ என் தேகம் முழுதும் முத்தமிட்டுச் செல்லும்போது நாணத்தில் நனைகிறேன்..
என்னையும் மீறி உன் அணைப்பில் மயங்கிட செய்யும் வித்தையை எங்கு கற்றுக்கொண்டாய்?
மழையே,, மகிழ்வுடனே என்னைத் தாலாட்டி செல்லும் தென்றலே.. இயற்கை அன்னையின் மடியில், தலை சாய்த்து தூங்கிட கள்வனே நீ உத்தரவு கொடு, பின் என் உயிர் மொத்தம் எடு.
++இலக்கியா++
இது தான் அந்த கவிதை. மேலும் இவரது முகநூல் கணக்கான, இனியத் தோழி இலக்கியா எனும் பக்கத்தில் பல கவிதைகளைப் படைத்துள்ளார்.