காரணம் சொல்லாயோ காதலியே

நித்தமும் பேசி
நிழலாக தொடர்ந்து
நெஞ்சோடு கலந்து
காதலாய் இசைந்து
பொடி நடை பழகி
தோளில் சாய்ந்து
மடியில் உறங்கி
காதோரம் கதை பேசி
கோபமாய் கடிந்து
உதட்டு மழையில் நனைந்து
கன்னம் குழியில் விழுந்து
உள்ளங்கையில் எழுந்து
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
புதைத்து வளர்ந்த நம் -காதல்
கசந்ததும் ஏனோ???......
காரணம் சொல்லாயோ காதலியே......

எழுதியவர் : (4-Feb-15, 11:16 pm)
பார்வை : 356

மேலே