உண்மை காதல்

சாஜஹான் மும்தாஜ் போல்
காதல் சின்னமில்லை அவர்கள்
அம்பிகாவதி அமராவதி போல்
காவியக் காதலர்களில்லை அவர்கள்
சொக்ஜோன் தொங்க்யி போல்
வரலாற்றுக் காதலர்களில்லை அவர்கள்

அவர்கள் சண்டைக்காரர்கள்
அவர்கள் முரண்டு பிடித்தவர்கள்
அவர்கள் அன்பானவர்கள்

அவர்களுக்கு இடையில்
தினம் தினம் சண்டை
இறுதியில் ஒரு கட்டிப்பிடிப்பு
அவர்களுக்கு இடையில்
தினம் தினம் வாய்த்தர்க்கம்
இறுதியில் ஒரு மெலிதான புன்னகை

காலங்கள் கடந்த பின்னும்
இன்னும் அவர்கள் புதுமண
ஜோடிகளாய் வயதான பின்னும்

ரகசியம் கேட்டால்
தினம் தினம் சண்டை
ஆனால் நீடிப்பதில்லை
தினம் தினம் தர்க்கம்
ஆனால் நீடிப்பதில்லை

உண்மை அன்பென்ற ஒன்று
மனதோடு இருந்தால் வயதான
பின்னும் இளமை காதலர்கள்
தான் எல்லோரும் ....

எழுதியவர் : fasrina (5-Feb-15, 10:10 am)
சேர்த்தது : fasrina
Tanglish : unmai kaadhal
பார்வை : 94

மேலே