மண் பயனுற வேண்டும்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

அய்யன் திருவள்ளுவரின் ஆழ்ந்த சிந்தனை வரிகள் இவை ....... பொருள் அனைவரும் அறிந்ததே இருந்தும் உங்களுக்காக மீண்டும்

ஆசைகள் அனைத்தையும் துறந்தோம் என்று சொல்லும் துறவிகளுக்கும் வாழ்வு என்பது கிடையாது உழவன் என்பவன் தான் அறிந்த உழுதலை கையில் எடுக்காமல் இருந்தால் .......

விலை நிலங்கள் எல்லாம் வீணாக நிலம் தின்னும் பட்சிகளுக்கு ரியல் எஸ்டேட் என்ற பெயரில் உணவாகிறது ! உழவு என்ற தொழில் வெகுவிரைவில் சரித்திர கால தொழிலாக மாறிவிடும் ..... விவசாயிகள் எல்லாம் மறைந்த இந்நில மக்களினமாக ஒருநாள் அறிவிக்கப்பட்டாலும் சொல்வதிற்கில்லை....... பயிர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டன...... நிலங்கள் அனைத்தும் விஷங்கள் ஆக்கப்பட்டன .......... களைக்கொல்லிகள் உயிர்க்கொல்லிகளாகவும் , பூச்சிக்கொல்லிகள் சந்ததி கொல்லிகளாகவும் மாறிவருகின்றன.......

சிட்டுக்குருவிகள் என்ற ஒன்றை நாகரீக மனிதர்கள் பார்த்து வெகுநாட்கள் ஆகின..... எங்கள் கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து இங்கே வந்த பத்து ஆண்டுகளில் கிளிகள் என்ற உயிரினத்தை நான் நான்கோ இல்லை ஐந்தோ முறைதான் பார்த்து இருப்பேன் ...... இவற்றிற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்காதீர்கள் .... எல்லாம் உணவுச்சங்கிலியில் பிணைக்கப்பட்ட உறவுகளே (மனிதர்களையும் சேர்த்தே ) ....... பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஏதோ தாவரத்தின் ஏதோ ஒரு பாகம் நிச்சயம் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரிந்த அல்லது தெரியாத விலங்கிற்கோ அல்லது பறவைக்கோ உணவாக இருந்திருக்கும்...... இப்பூமி மிக சிறியது என்பது எத்தனை உண்மை ..... நமக்கும் நம்மை சாரதா ஏனைய உயிரனங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உணவு தருபவன் குடியானவனாகத்தான் இருக்கின்றான் .....

அவசர கால உலகில் எதையும் நின்று நிதானித்து யோசித்து பார்த்து புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு குறைந்து கொண்டே செல்வது உண்மைதான் என்ற போதிலும் உப்பிட்டவனை மறைவதா பண்பினை கொண்ட மக்களாக உழவுக்கு உங்களால் இயன்ற ஒன்றை செய்யுங்கள் அவ்வுதவி இயற்க்கை முறையில் விவசாயம் செய்யும் உழவனுக்காக இருந்தால் மேலும் சிறப்பே .......... மண் பயனுற உங்களால் ஆனதை இன்றே செய்திடுங்கள்....... இதுவே உங்களின் வருங்காலத்திற்கு நீங்கள் சேர்த்து வைக்கும் மிக பெரிய செல்வமும் ஆகும் .........


/// நண்பர்களின் மேலான கவனத்திற்கு - எங்கள் குடும்பம் நடத்தும் போட்டி நிறைவுற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன...... /// பங்கு பெறுங்கள் ....... பரிசினை வென்றிட எங்களின் வாழ்த்துக்கள் .............


நன்றிகளுடன்

மகிழினி

எழுதியவர் : மண் பயனுற வேண்டும் (6-Feb-15, 9:29 pm)
Tanglish : man payanura vENtum
பார்வை : 2614

சிறந்த கட்டுரைகள்

மேலே