நிர்க்கதி
சமூகம் எறிந்த கற்களால் சிறகுகள் ஊனமாகி நிற்கிறேன் தனிமையில் வேலி தாண்ட வழியின்றி...
படி தாண்டா பிள்ளையென அன்னை ஆனந்தம் கொள்ள ஆருயிர் காதலை பழி கொடுத்து சவமாக நடமாடும் அவலம்...
முரண்பட்ட மதங்களின் இடுக்கில் சிக்கி தவிக்கும் ஒன்றுபட்ட இதயங்கள்...
அணு அணுவாய் ரசித்த வாழ்க்கை உலைக்கு செல்லும் பாதையில் பயணமாகிறது...
ஒன்று சேரந்தால் சுயநலம்
சேராவிட்டால் துரோகம்
செத்து மடிந்தால் கோழை
மூன்று பாதைகள் இருந்தும் பயணம் ஒன்றும் இல்லை..

