காதல் சுவடு

நிலையில் லாமையே நிலையென நாட்ட
அலையால் முயன்றே ஆர்க்கும் பெருங்கடல்,
வரைந்த ஓவியத்தைக் கலைக்கும் குழந்தையின்
இரைந்த வண்ணமாய் இனிய வானம்,
குறுக்கே வீசும் குளிர்ந்த காற்றில்
சுருக்கம் நீங்கிய சுடுமணற் போர்வை
வரலா றாக பதிப்பது போல
நிரலாய்ப் பதித்தவுன் நிதானச் சுவடுகள்
பட்டும் படாமலும் பக்கம் பதிந்தவென்
சுவடின் இடைவெளி சொல்லும்
காதலொடு சேர்த்ததன் கண்ணியத் தையுமே!

[நேரிசை ஆசிரியப்பா!]

எழுதியவர் : விஜயநரசிம்மன் (7-Feb-15, 10:10 pm)
Tanglish : kaadhal suvadu
பார்வை : 350

மேலே