கேள்வியால் பதில்

காலம் கடந்து
யோசிக்கும் போது
அமைதிகள்
அமைதியாய் ஒட்டிகொள்கின்றன
தேகத்தின்
ரத்த நாளங்களை
எண்ண தொடங்குகிறேன்
முதுமையின்
சுருக்கங்கள் மூளையை
போர்த்தி அமைகிறது
விடியலின் வெளிச்சங்கள்
இருள் விரிப்பில்
படுத்துறங்குகிறது
காகத்தின் சத்தம்
ஒலி சவ்வை
கொத்தி தின்கிறது
குதிங்காலில் குத்திய
முள் உள்ளேயே
ஒரு குடும்பம் நடத்துகிறது
முந்தானை காத்து அவ்வபோது
கண்களை மூடவைத்து
செல்கிறது
பள்ளிகூட இருக்கையை
நான் எழுதி கொண்டிருக்கும்
மேசை நினைவுபடுத்தியது
என் கண்ணீர் ஏந்திய
புத்தகங்கள் பல இருந்தும்
நான் எழுதும் எழுத்துகள்
என் மௌனத்தின்
கண்ணாடிகள்

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Feb-15, 11:35 am)
பார்வை : 74

மேலே