மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி- நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்

நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்
பல நாட்களாக ஓய்ந்திருந்தது
தினமும் மரணச் செய்தி கேட்டுக்கொண்டே இருந்த செவிகள்
அன்று சந்தோஷ முழக்கத்தை கேட்டது
தென்றலாய் மிதந்து வந்த காற்றில்
சடலங்களின் நெடியும் செர்ந்து வந்ததை அப்போதுதான் உணர்ந்தேன்
வறண்டு வெடித்திருந்த பூமி மீது
குருதி ஆறு ஓடியதால் பதபதத்திருந்தது
பிழைத்தவர்கள் எல்லோரும் வென்றவர்களானார்கள்
உயிரை இழந்தவர்கள் தியாகிகளானார்கள்
இழப்பின் துயரம் இருந்தாலும் நாட்டைக் காத்த
சந்தோஷமே மேலோங்கி நின்றது
எங்கள் மூச்சை விட்டு வாங்கி தந்த சுதந்திர காற்று
இனி உங்கள் மூச்சு காற்று ஆகட்டும் என்று
ஒலித்தது போல் இருந்தது அந்த நொடி!
வெள்ளையனை விரட்டியடித்து
கறுப்பர்களை பற்றுவதற்கு கண்ணியமாய் இருந்த அமைதியே வா!
சாதி இல்லை, மதம் இல்லை, மனிதம் உண்டு
இத்தனையும் இன்று கனவில் உதித்த புதிய பாரதம்
நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்


- S.Nithyalakshmi
64/7A,Philominal nagar
Minnagar
Thirukanoorpatti(po)
Thanjavur(dt)-613303
Ph.No :8056450112

எழுதியவர் : S.Nithyalakshmi (8-Feb-15, 9:32 pm)
பார்வை : 81

மேலே