===+++நெஞ்சு பொறுக்குதில்லையே+++===

நெஞ்சு பொறுக்குதில்லையே;
நஞ்சு உளம் கொண்டு
அஞ்சு பூதங்களை
விஞ்சி யழியும் நிலை
நெஞ்சு பொறுக்குதில்லையே...

கஞ்சி கொடுத்த படையாம் - அது
காட்டில் திரியும் படையாம்;
சேற்றில் சோறெடுத்து
ஊட்டுக் கரமுடைய
நெஞ்சு பொறுக்குதில்லையே...

ஓட்டு போட்டுபோட்டு - நாட்டில்
ஊழல் மலிந்து போச்சு;
வெள்ளை நிறமுடுத்தி
அகத்தில் லழுக்கொழுக
நெஞ்சு பொறுக்குதில்லையே...

ஞானம் பெருக பெருக
விஞ் ஞானம் வளரலாச்சு:
வாழ்க்கை எந்திரமாய்
ஆயுள் தொலையுதடா
நெஞ்சு பொறுக்குதில்லையே...

கணணி உலகமாச்சு - நம்ம
கனவு வானமாச்சு;
அருகில் வாழ்விருந்தும்
தொலைவி லோடும்நிலை
நெஞ்சு பொறுக்குதில்லையே...

ஏகபோக வாழ்க்கை - நீ
தேடித் தேடி யலைந்து;
கடைசி மூச்சுவரை
துளியும் வாழவில்லை
நெஞ்சு பொறுக்குதில்லையே...

நெஞ்சு பொறுக்குதில்லையே;
நஞ்சு உளம் கொண்டு
அஞ்சு பூதங்களை
விஞ்சி யழியும் நிலை
நெஞ்சு பொறுக்குதில்லையே...



-----------------நிலாசூரியன்.தச்சூர்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (10-Feb-15, 2:33 pm)
பார்வை : 394

மேலே