வரலாற்று யாத்திரைகள்-07-ஒருபக்கக்கதைகள்---ப்ரியா

சிரித்துக்கொண்டே மக்களை ஒரு அன்புப்பார்வை பார்த்துவிட்டு தூக்குமேடையை நோக்கி சென்றார் வீரப்பாண்டிய கட்டப்பொம்மன்..... மரணம் ஒரு முறை தான்.... மானம் மரணித்த பிறகும் என்பது தான் இந்திய ரத்தம்....ஊரே கண்ணீரோடு வேடிக்கை பார்க்கிறது. கண்ணீரில், காலம் பின்னோக்கி செல்கிறது......

வானம் பொழிகிறது..... பூமி விளைகிறது.... உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி...வரி கேட்டால் புலியாகும் எமது படை ஓடி விடுங்கள். ஒழித்து விடவும் தயங்க மாட்டோம்....

பெருங்கோபம் இரு பக்கமும்....

பெருங்கோபம் பெரும் போரானது. வெள்ளையனிடம் துப்பாக்கி.. கட்டபொம்மனிடம் வாள் மட்டுமே. விளைவு. தோல்வி.

கட்டப்பொம்மனை கைது செய்த ஆங்கிலேயர்கள் சும்மா பெயரளவுக்கு ஒரு விசாரணை நடத்திவிட்டு அவரை குற்றவாளி என அறிவித்து கி.பி.1799ஆம் ஆண்டு அக்டோபர் 16-ம் நாள் கயத்தாறு என்னும் இடத்தில் மக்கள் மற்றும் அனைவர் முன்னிலையிலும் தூக்கிலிட கட்டளையிட்டார் ஆங்கில ஆட்சியாளன் ஜாக்சன்.

சிரித்துக்கொண்டே மக்களை ஒரு வீரப் பார்வை பார்த்துவிட்டு தூக்குமேடையை நோக்கி சென்றார் வீரப்பாண்டிய கட்டப்பொம்மன்.....

தன் உயிரை துச்சமென மதித்த அவரின் அந்த நாட்டுப்பற்றையும் வீரத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கண்ணீர் வெள்ளத்தில்... பரிதவித்து நின்றனர்...

தூக்கு மரத்தில் இதோ சற்று நேரத்தில் தூக்கில் தொங்க போகிறார் கட்டப்பொம்மன்.

கூட்டத்தில் முதல் முறையாக அத்து மீறிய சலசலப்பு.... சட்டென ஒரு கும்பல்.. ஒன்று சேர்ந்து ஜாக்சன் உள்பட சுற்றி இருந்த ஆங்கிலேயர்களை தாக்கத் தொடங்கினார்கள்.

யார் நாட்டுல வந்து யாரடா தூக்குல போடறீங்க என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டே ஜாக்செனை வெட்டி வீழ்த்தினார்கள்...

தன் கழுத்தில் கிடந்த தூக்கு கையிற்றை கழற்றி எறிந்து விட்டு மீசை முறுக்கி நடக்கத் தொடங்கினார் கட்டப்பொம்மன்... அவரின் பின்னால் ஒரு மாபெரும் புரட்சிக்கான மக்கள் வெள்ளம்.... அலையென திரண்டது.....

ப்ரியா.....

எழுதியவர் : ப்ரியா (10-Feb-15, 3:07 pm)
பார்வை : 215

மேலே