காதலின் சாபம்

வாங்க வாங்க என்ன செஞ்சீங்க சின்ன வயசா இருக்கீங்க க‌ல்யாணம்ஆயிடுச்சா...


யார தேடுறீங்க....

என்னோட கணவர தேடுறேங்க...

அப்ப கல்யாணம் ஆயிடுச்சு..
எப்படி இங்க வந்தீங்க...

வேலை செய்யுற இடத்துல கீழ விழுந்துட்டேங்க பின்னாடி தலையில அடிபட்டுடுச்சு... அதான்...


அப்டியா...

உங்க கணவருக்கு எப்படி இப்படி ஆச்சு...

எனக்கு முன்னாடியே அவரு இங்க வந்துட்டாருங்க அவருக்கும்
இப்படித்தான்...

நல்லா குடிப்பாரு குடிச்சுட்டு குளத்துல குளிக்கும் போது பாசி வழுக்கி தவறி விழுந்து தலையில அடிபட்டு அந்த எடத்துலேயே
அவரும்.....

அச்சச்சோ நீங்களும் இங்க வந்துட்டீங்க....

உங்களுக்கு குழந்தைங்க... ம் இருக்காங்க ஒரு பொண்ணு ஒரு பையன் ரொம்ப சின்னப்பசங்க...

அவங்க எப்படி இருப்பாங்க... யாரு பாத்துப்பா...

நான் என்னப்பண்ணுறது.... அவங்க ஆயாவும் சொந்த பந்தங்களும்
பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு...


என்னங்க போங்க..என்ன இருந்தாலும் நீங்கலாவது இருந்து பசங்கல‌
பார்த்திருந்திருக்கலாம்... சரி விடுங்க அது என்னோட தப்பு....

என்னமோ போங்க ஆமா எப்படி உங்க கணவர கல்யாணம் பண்ணீங்க....

காதலிச்சுதான்... என்னோட கணவர் வேற மதம்ங்கரதால.. என்ன எங்க வீட்ல சேர்த்துக்கல.... தலை முழுகிட்டாங்க....
நான் அவர்தான் பெருசுன்னு அவரோட வந்து கல்யாணம்பண்ணி
சந்தோஷமாத்தான் இருந்தோம்....

என்ன வாழ்க்கை பாதியிலேயே அவர் வந்துட்டார்... பின்னாடியே
நானும் வந்துட்டேன்....

என்னோட சொந்தம் யாருன்னே என்னோட பிள்ளைகளுக்கு தெரியாது... எல்லாம் என்னோட கணவரோட சொந்தங்கள்தான்..

சரி விடுங்க இப்ப என்ன செய்றது... நான் என்ன சொல்றேன்னா
காதலிக்கிறது தப்பில்ல....இரண்டு குடும்பமும் ஒத்துபோணா
காதல்ல நிலைச்சு நிக்கலாம்...இத நான் ஏன் சொல்றேன்னா...

அங்கபாருங்க உங்க மகனையும் மகளையும் எப்படி கதற்றாங்கன்னு......

அய்யோ நான் என்ன பண்ணுவேன்...
என்பிள்ளைகளின் நிலை என்ன கடவுளே இது உனக்கே நியாயமா...
நான் செய்த குற்றம் என்ன...? காதலித்து திருமணம் செய்ததா...
என் பெற்றோர்கள் விட்ட சாபம் என் பிள்ளைகளை அல்லவா....
அனாதை ஆக்கி விட்டது....

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (11-Feb-15, 9:17 am)
Tanglish : kathalin saabam
பார்வை : 379

மேலே