வரலாற்று யாத்திரைகள் 8

மே 19, 2005 அன்று மாலை ​வீட்டில் வழக்கம் போல இணையதளத்தில் மூழ்கி இருந்தேன் .
என் அலைபேசி அலறியதை கேட்டவுடன் யார் இந்த நேரத்தில் என்று முணுமுணுத்து கொண்டே
எடுத்தேன் . என் நெருங்கிய நண்பன் ஒருவரின் பெயர் வந்தது....நேற்றுதானே இவன்கூட பேசினேன் என்று மனதில் சொல்லிக்கொண்டு , சொல்லுடா, என்ன செய்தி என்றேன் .

அந்த முனையில் இருந்து சோகமுடன் ஆரம்பித்தான் ...நானும் அவர்கள் குடும்பத்தில் ஏதாவது
பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது துக்க நிகழ்வா என்று அதற்குள் மூளையை கசக்கிக் கொண்டேன் .டிவி பார்க்கலியா என்றான் ....ஏன் என்றேன் நான் . முதலில் பாருடா என்று ஆவேசமாக கத்தினான் .

நான் குழப்பமுடன் தொலைக்காட்சியை அரைமனதுடன், ஆனாலும் அறிய வேண்டிய ஆவலாய்
ரிமோட் மூலம் ஆன் செய்தேன் . மறுபடியும் எந்த சேன்னல்டா என்றேன் ...ஏதாவது ஒரு செய்திகளை பார் என்றான் வேகமாய் . உடனடியாக " சன் நியூஸ் " க்கு மாற்றினேன் . இப்போதெல்லாம் நாம் அனைவருமே பொதுவாக அந்த செய்திகளைத்தானே கேட்கிறோம் உடனே .. கட்சி பாகுபாடின்றி . பழகிவிட்டது. மற்றவைகள் மறந்து போகின்றன. ( ஆனால் தற்போது நிறைய செய்திகள் சேனல்கள் வந்துவிட்டன )

அதில் கண்ட காட்சியை கண்டதும் நானே அலறிவிட்டேன் .....இலங்கையில் , சிங்கள வெறி கொண்ட நாய்களால் தமிழ் புலிகளின் தலைவன் , உலகமே கண்டு அதிசயித்த மாபெரும் தமிழன் , இனத்திற்காக இறுதிவரை போராடிய ஒருவன் , திரு பிராபகரன் அவர்களின் உடலை திரும்ப திரும்ப காட்டிக்கொண்டே இருந்தார்கள் திரையில். அதிர்ச்சியும் சோகமும் எனை அறியாமல் சூழ்ந்து கொண்டது ...என்னவென்றாலும் நம் தொப்புள்கொடி உறவுகள், தம் இனத்தின் உரிமைகளுக்காக பல்லாண்டுகளாக போராடும் தமிழர்களின் தளபதி , சுட்டுக் கொல்லப்பட்டிருந்த காட்சி என்னை அறியாமல் அழ வைத்து விட்டது. உடனே அனைத்து தொலைகாட்சி செய்திகளையும் மாறி மாறி பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

ஒரு இனத்தின் சகாப்தமே இலங்கையில் முடிந்து விட்டதே என்று நினைத்து மிகவும் வருந்தினேன் . அந்த வீரமரணமும் ,அதன்பின் நடந்த நிகழ்வுகள் , தமிழ் இனத்தின் மாபெரும் வரலாறாய் இன்றுவரை கருதப்படுகிறது உலக மக்களால் .

கொலை வெறியன் , சிங்களைநாய் , ராஜபகஷே திரையில் சிரித்து கொண்டிருந்தான் ...அதன் பின்பு பிராபகரன் அவர்களின் குடும்பமே அழிந்து விட்டதையும் , அவரோடு பல இரண்டாம்கட்ட தலைவர்களும் , அப்பாவி பொது மக்களும் கொன்று குவித்ததை அறிந்தோம். இதுநடந்து முடிந்தது நாம் வாழும் காலத்திலேயே நடைபெற்ற ஒரு வரலாற்று நிகழ்வு. சோகத்தின் உச்சம் .

அதனை இப்படி மாற்றி யோசித்தேன் .....

அந்த செய்தி வந்த சிறிது நேரத்தில் , உடனடியாய் காட்சிகள் மாறின .....திரையில் திரு பிராபகரன் அவர்கள் தன் சக தோழர்களுடனும் , குடும்பத்தினருடனும் சிரித்து கொண்டிருந்தார். நேரிடையாக பேட்டி அளித்தார் . யாரோ ஒருவரை என்னை போன்ற தோற்றமுள்ள அப்பாவி தமிழரை கொன்றுவிட்டு கொக்கரிக்கிறான் சிங்கள வெறியன் , தமிழின எதிரி ,ராஜபக்சே ... நம்பாதீர்கள் ...நாங்கள் அனைவரும் ஒரு மறைவிடத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளோம் .. தமிழர்களே
மனம் தளராதீர்கள் ...நாம் நம்முடைய போராட்டத்தில் வெல்வோம்....தமிழ் ஈழம் பிறக்கும் நிச்சயம் இது உறுதி என்று ஆவேசமாக பேசினார்.
துள்ளி குதித்தனர் உலகத் தமிழர்கள் அனைவரும் இதனை கண்டு. .....

அதுமட்டுமல்ல சரியாக அரைமணி நேரம் கழித்து மறுபடியும் எல்லா சேனல்களும் அலறின .. ராஜபக்சே கொல்லப்பட்டான் அவர் குடும்பத்தினர் தமிழ் ஈழ விடுதலை புலிகளால் சிறை பிடிக்கப்பட்டனர் என்று. தமிழ்நாடே கொண்டாடியது அதனை ...

சாலையெங்கும் பட்டாசு சத்தம் ...ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் , கட்சி பாகுபாடின்றி தமிழ் உணர்வுள்ள அனைவரும்.
உலகம் முழுதும் ஒரே கொண்டாட்டம் ஆங்காங்கே உள்ள தமிழர்களால் .

சென்னை அண்ணா சாலையில் உள்ள மேம்பாலம் முழுவதும் வாகன போக்குவரத்து இல்லை. ஒரே மக்கள் தலையாக காட்சி அளித்தது....மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் தமிழர் கூட்டம் குடும்பத்துடன் ...

அன்று இரவே அவசரமாக கூடியது இலங்கை பாராளுமன்றம் . ஒருமித்த கருத்தோடு மிகுந்த ஆரவாரத்தோடு நிறைவேறியது ஒரு மசோதா . தமிழர்களுக்கென்று தனி நாடு போன்று ஒரு மாகாணம் .. அதற்கு இலங்கை அரசே திரு பிராபகரன் அவர்களை முதல் மந்திரியாக நியமனம் செய்தது. சிங்களர்க்கு உள்ளது போன்ற அனைத்து உரிமைகளும் , அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது .

தனி ஈழம் விரைவில் மலர்ந்திட இலங்கை அரசே துணை நிற்கும் என புதிய ஜனாதிபதி அறிவித்தார்.

( உண்மையில் இப்படி நடந்து இருந்தால் நாம் அனைவரும் எப்படி மகிழ்ந்து கொண்டாடி இருப்போம் ....? )



பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Feb-15, 11:44 am)
பார்வை : 161

மேலே