ஜான்சி ராணி - சுதந்திரதேவி
நவம்பர் 19 , 1828 ஒரு அழகிய பெண் குழந்தை மராத்திய மாநிலத்தில் பிறந்தது. அக்குழந்தைக்கு 4 வயது ஆகும் போது தாயை இழந்தாள். தந்தையின் அரவணைப்பில் கல்வியோடு குதிரையேற்றம், வில்போர், வாள்போர் கற்றுக்கொண்டு வீரத்தில் சிறந்து விளங்கினாள்.
எல்லோராலும் மணிகர்ணிகா என்றும் , மனு என்றும் அழைக்கப்பட்டாள்.
1842 இல் ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருடன் திருமணம் நடந்தது. அவளுக்கு சிறுவயதிலிருந்தே வெள்ளையர்களை கண்டால் மிகுந்த வெறுப்பு. அந்நிய நாட்டிலிருந்து வந்து என் தாய் நாட்டை அடிமை படுத்துவதற்கு என்ன ஒரு தைரியம். ஒண்ட வந்தவர்கள் அதிகாரம் செய்ய நினைப்பது என்ன நியாயம்.
இந்த வெள்ளையர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று சிறு பிராயம் முதலே எண்ணி வந்தாள்.
1851ல், அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக, அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.
1853 ல், மகாராஜா உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த ராணி அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.
தத்தெடுத்த குழந்தை தாமோதர் ராவை அரியணை ஏற்ற நினைத்தார் ராணி. ஆனால் அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ இருந்தார். தத்தெடுத்த குழந்தை என்று காரணம் காட்டி அரியணை ஏற்றுவதை ஏற்று கொள்ள ஆங்கில ஆட்சியாளர்கள் மறுத்தனர்.
மேலும் ராணியை நாட்டை விட்டு துரத்தி , நாட்டை கைப்பற்ற முடிவு செய்தனர். வீரம் நிறைந்த ராணி விடுவாரா? ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் நாட்டின் மீது படையெடுத்து வந்தது.
ஆண்கள் படையோடு வீரம் நிறைந்த பெண்களையும் படையில் சேர்த்து, தன் வளர்ப்பு மகனை முதுகில் சுமந்தபடி வீரமாக போரிட்டார்.
வெள்ளையர்களை ஓட ஓட விரட்டி வெற்றி வாகை சூடி, தன் மகனை அரியணை ஏற்றி நாட்டில் நல்லாட்சி புரிந்து மக்களை காத்தார் மகாராணி , ஜான்சிராணி லக்ஷ்மி பாய்.