வேண்டினேன்
வரம் வேண்டினேன் !!!
பிறக்க கூடதென்று வேண்டினேன் ,
பிறந்தாலும் குழந்தையாகவே இருக்க வேண்டினேன் ,
வளர்ந்தாலும் போராட்டம் இல்லாத வாழ்க்கையை வேண்டினேன் ,
போராடினாலும் தோல்வியே வேண்டாமென்று வேண்டினேன் ,
தோற்றாலும் ஒடிந்து விழுந்திடகூடாது என்று வேண்டினேன் ,
விழுந்தாலும் பிறர் ஏளனப்படுத்த வேண்டாம் என்று வேண்டினேன் ,
பிறர் ஏளனப்படுதினாலும் கொடிய துன்பம் வேண்டாம் என்று வேண்டினேன் ,
கொடிய துன்பம் வந்தாலும் தாங்கும் மனநிலை வேண்டினேன் ,
தாங்கும் மனம் இல்லாவிட்டாலும் மரணம் வேண்டாம் என்று வேண்டினேன் ,
மரணித்தாலும் நரகம் வேண்டாம் என்று வேண்டினேன் ,
நரகம் சென்றால் என்ன வேண்டுவது என்று தெரியவில்லை,
அதனால் வேண்டுவதை விட்டு செயலாற்ற தொடங்கினேன்....
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன் வெற்றியும் தோல்வியும்
சமமாக நினைத்து சந்தோசமாக....

