வணக்கம் வாழ்த்துங்கள்
உயிர் எழுத்தாய் மெய் எழுத்துடன்
இணைந்தே உயிர்மெய் தோன்றும்
உன்னத வார்த்தையது அம்மா ..
அம்மாவின் பாசத்தில்
விடமும் விலாசம் தொலைக்கும்
தடமும் தாமரைப் பூக்கும்
பூவாத் தாவரமும் பூத்துக் குலுங்கும்
அந்த குறிஞ்சி மலரும் வருடம் மறக்கும்
மறந்தே மலரும் நாளுக்கு ஒன்றே .
அதைக் கண்டு மகிழ்வேன் நித்தம்
நானே ,
நானும் அன்னையும் நல்ல தோழியே
என்றும் அவளே எதிலும் சிறப்பே
சிறப்புடன் சேர்ந்தே எந்த
சிரத்தையும் வெல்வேன் சிந்தனை
சிறகால் சிகரம் தொடுவேன் ....
தொட்டால் சிகரம் சிறுமைதானே
அங்கு நடுவேன் நானே -என்
அன்னையின் அன்பை ..
அன்பால் கூடி அகிலம் நாடி
பேதப் பிரிவை துரத்தி
அடிப்பேன் அங்கு சமத்துவ
நாற்றை நட்டு வளர்ப்பேன் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
