புதிராட்டம் -சந்தோஷ்

தொண்டை குழியில்
பசையொட்டிய ஒருவித
உணர்வு பிழையேந்தும்
நாக்கு தசை
பேசமுடியா மூச்சிரைப்பில்
இதழ் வழியே
ஒரு சொல்லை வெளியிட்டது
அது ‘தாகம்’ என்றானது.
என்னிதழுக்கு
உன்னிதழால் நீ
கவ்விக் குதறிற்று
வேதனை நீர் ஊற்றினாய்.
தாகத்திற்கு
எந்நீர் என்றாலும் என்ன
எந்த ரணமானலும் என்ன.
அந்நொடியில் தீர்வது
ஒரு தீர்வுதானே....?
இப்போது.............
இப்போது.......................
என் தாக ரணம் போனது.
ரணம் தாகம் எடுக்கிறது.
நிழல் தேவதையே..!
உன் கரங்களினால்
தேவைப்படுகிறது
ஒரு மருந்து களிம்பு...
இல்லையேல்
ஒரு மரண விளிம்பு...
இமைதிறந்து தான்
நெஞ்சு நிமர்த்தி
நிரந்தரமாய்
இமை மூடிவிடக்கூடாது
என்பதற்காகவே
உன்னிடம் நித்தமும்
முத்தப்போரிட்டுதானே
இருக்கிறேன்.
ஆனாலும்,
புரியவில்லை தோழி..
என்னவாக என்னை
புதிராக புதியதாக
செய்து கொண்டிருக்கிறாய்..
என்
வாழ்க்கை கவிதையே..?
-இரா.சந்தோஷ் குமார்.