மறு ஜென்மம் எடுத்துவிடு

கருப்பை முட்டையிலே
அடைகாத்த என் தாயே
கல்லறை குழிக்குள்ளே
அடைக்கலம் ஏன் புகுந்தாய்?
உன் மார்பின் நிழலினிலே
சிசுவாக நாள் கழித்தேன்
அம்மா நீ எதை நம்பி
தனிமையிலே எனை
ஏய்த்து சென்றாய்?
பகலிரவு அறியலையே
அயராமல் உன்னை எண்ணியே
சுயநினைவு இழந்து விட்டேன்
சுயநலமாய் நீ சென்றதிலே
நீ மடிந்த தருணத்திலே
உறவினராய் வந்த ஜனம்
நான் தேடி செல்கையிலே
என் முகம் பார்க்க தயங்கியதே
இனி என் சொந்தம் யாரென்று
என் தாயே நீ சொல்லு
உன் பதில் மௌனம் என்றால்
என் மகளாய் நீ பிறந்துவிடு
மறு ஜென்மம் எடுத்துவிடு!

எழுதியவர் : இந்திராணி (12-Feb-15, 10:56 am)
பார்வை : 117

மேலே