இன்னும் சற்று நொடிகளில் - இது ஒரு கவிதைப்போட்டி பற்றிய அறிவிப்பு

**...இன்னும் சற்று நொடிகளில்...**


தோழமை நெஞ்சங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்...

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... ஒவ்வொரு மனிதருக்கென்றும் ஒரு தனி அடையாளம் உண்டு...
உலகில் உள்ள ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு வாசமுண்டு... நறுமணமே இல்லாத பூக்களும் உலகில் உண்டு... வானவில்லின் ஒவ்வொரு கோட்டுக்கும் வேறு வேறு நிறமுண்டு... பூவினத்திற்கும் வண்டினத்திற்கும் கூட தனி அடையாளங்கள் உண்டு...

அது போல் , நமக்கு அடையாளம் , கவிதைகள்....

கவிஞர்களின் உலகில் தவழ்ந்து கொண்டிருக்கும் சிறு குழந்தை நான்... 'ஒரு கவிஞருக்குண்டான கற்பனைகளின் எல்லை எது'வென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது தான் தோன்றியது , 'கற்பனை என்பது எல்லைகளே அற்ற ஒன்று' என்று...

கற்பனைகளின் உலகில் எதுவும் சாத்தியமே ...

சில கற்பனைகள் வெறும் எண்ணங்களாகத் தேங்கி விடாமல் செயலாகவும் நடத்தப்பட்டு மனித இனத்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கான வழிகளை வகுத்து விடுவதுண்டு...

எல்லைகளைக் கடந்து யோசிக்கக் கூடியது மனித மனம்... எல்லைகளற்றது கவிஞர்களின் கற்பனைகள்...

'இப்படி ஒன்றை செய்து பார்த்தால் என்ன' என்று சிந்தித்த போது உருவானதே இந்த **இன்னும் சற்று நொடிகளில்** என்ற ஒரு கவிதைப் போட்டிக்கான எண்ணம்...

அது என்ன **இன்னும் சற்று நொடிகளில்** ?!

ஆம் நண்பர்களே... இது ஒரு கவிதைப் போட்டி... சற்றே வித்தியாசமான கவிதைப் போட்டி...

அதாவது ,

இந்தக் கவிதைப் போட்டியில் , போட்டிக்கான கால அவகாசம் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே... அந்த மூன்று மணி நேர கால அவகாசம் துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக கவிதைக்கான தலைப்பு அறிவிக்கப்படும்... தலைப்பு அறிவித்த அரை மணிநேரம் கழித்து தோழமைகள் தங்களின் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும்... மூன்று மணி நேர கால அவகாசத்திற்கு பிறகு போட்டி நேரம் நிறைவடையும்...

இதில் இன்னும் ஒரு சிறப்பு உண்டு தோழர்களே...

அது என்னவென்றால் , போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான முடிவுகளும் போட்டிக்கான கால அவகாசம் முடிந்த மூன்று மணி நேரத்துக்குள் அறிவிக்கப்படும்...

இந்தப் போட்டி நடைப்பெறப் போகும் நாள் வரும் ஞாயிறு ,அதாவது நாளை மறுநாள்... 15 பிப்ரவரி 2015.. போட்டி குறித்த முழு விவரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும்...

வாருங்கள் தோழர்களே ... கரங்கள் கோர்ப்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம் ... இப்படி ஒரு செயலை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவோம்...



- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (13-Feb-15, 2:18 pm)
சேர்த்தது : கிருத்திகா தாஸ்
பார்வை : 122

மேலே