அன்பையே கொன்றாள் சூழ்ச்சியில்

அன்று களங்கம் அற்ற அன்பு
கைகேயி வைத்திருந்தாள் மைந்தன் ஸ்ரீ ராமனிடம்
அதனை கலைக்க மந்தரை என்னும் கூனி
திட்டம் தீட்டினாள்,ஏன் /
ராமன் மீது உள்ள வஞ்சத்தினால்

அவன் ஒரு முறை மந்தரையைப் பழித்து
அவளுடைய கூனல் முதுகின் மீது
கல் வீசி விட்டான்
கோபம் கொண்ட மந்தரை சமயம் பார்த்து
பழிக்குப் பழி வாங்கத் திட்டம் கொண்டிருந்தாள்

தன் செல்வப் புதல்வன் ராமன் மணிமுடி சூடப் போகும்
மகத்தான செய்தி கேட்டு உள்ளம் பூரித்தாள் கைகேயி
கைகேயியின் மகிழ்ச்சி கண்டு
மந்தரை இன்னும் கோபம் கொண்டாள்
கைகேயின் மனதை எப்படியாவது மாற்றி விட
எத்தகைய சூழ்ச்சிகளை கையாள முடியுமோ
முயன்று விட்டாள்

கைகேயின் மெனமையான உள்ளத்தை
ராமனுக்கு எதிராகத் திரித்து விட்டாள்
கைகேயி மனம் மாறி விட்டாள்
அன்புள்ள கணவனான தசரதச் சக்கரவர்த்தியின்
வஞ்சமற்ற மனதின் கொஞ்சும் கெஞ்சல் அன்பு எதனாலும்
கைகேயின் விஷம் ஏறிய மனதை
கொஞ்சமும் மாற்றிட முடியவில்லை

கைகேயி அழுதாள் புரண்டாள் தலைவிரி கோலமாய்
தரையில் வீழ்ந்து தன் எண்ணம் பலித்திட
மன்னனிடம் மூன்று வரம் கேட்டாள்
மறுத்தால் தான் கொடுத்த வாக்கு பொய்த்து விடுமே
என்று கலங்கிய தசரத மன்னன்
பெண்ணே உன் வரங்கள் என்ன என்று கேட்டார்

அவள் கேட்ட வரங்கள்
மன்னனின் நெஞ்சையே பிழிந்து விட்டது
மறுக்க முடியவில்லை போராட முடியவில்லை
கொடுத்தார் , தரையில் சாய்ந்து விட்டார்
இது மந்தரை என்னும் கூனியின் சூழ்ச்சி
என்பது எவருக்கும் தெரியவில்லை

எழுதியவர் : பாத்திமா மலர் (13-Feb-15, 2:02 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 79

மேலே