தகப்பன்

தகப்பன்
காலை 6.30மணிக்கு எழுந்து தன் உடற்சோர்வை வெளியில் காட்டி கொள்ளாமல் வேலைக்கு கிளம்பி நடந்தே பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தார் பெரியவர்.
அதிக வெயிலின் காரணமாக தனக்கு ஏனோ நடக்க போகிறது என்பதை உணர்ந்து நிழல் குடைக்கு விரைந்து செல்ல நினைக்கையில் நிலைகுலைந்து விழுந்தார்..
அருகில் நின்றவர்கள் அவருடைய கைப்பேசியை எடுத்து அதில் இருந்த எண்ணகளில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்...
பெரியவரின் மனைவி நடையும் ஓட்டமுமாக விரைந்து வந்த போது அதற்குள் பெரியவர் மயக்கம் தெளிந்து இருந்தார்..
பெரியவரும் மனைவியும் வீட்டிற்கு வருவதற்குள் பெரியவரின் இளைய மகனும் மகளும் பெரியவரின் நலன் விசாரித்து இருந்தனர்..
மூத்த மகன் நேரில் வந்து பார்க்கும் போது மாலை நேரமாயிருந்தது...
இரவு பெரியவருக்கு ஏனோ மனம் வலித்தது...அருகில் இருந்தும் நேரில் வந்து பார்க்காத, கைப்பேசியில் அழைக்காமல் மௌனமாக இருந்துவிட்ட செல்ல மகளை நினைத்து தான் அந்த வேதனை...
மறுநாள் காலையில் தன் வேலைக்காக எப்போதும் போல பெரியவர் கிளம்பி சென்றார்...நேற்று வந்த மயக்கத்தை விட மற்ற மூன்று பிள்ளைகளின் விசாரிப்புகளை விட மௌனமாக இருந்துவிட்ட மகளை நினைத்து தான் வலி இருந்தது...

எழுதியவர் : பர்வீன் கனி (14-Feb-15, 11:29 pm)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : thagappan
பார்வை : 328

மேலே