இன்னும் சற்று நொடிகளில் சிந்திப்பாயா சில நொடிகள்

பிறந்த மண் அது உரிமை இல்லையாம்
தவண்டு திரிந்த முற்றத்தின்
மண்ணின் வாசம் மறக்கவில்லை இன்னும்
ஆனால்
..அது கூட சொந்தம் இல்லையாம்
எனக்கு
தோப்புகரணம் நூறு போட்டு
விதம் விதமாய் படைத்து நாம் உண்டு
மகிந்த கோவில் அன்று
இருந்த இடம் தெரியவில்லை இன்று

நான் படித்த பாடசாலையில்
நாதி அற்று முற்றததில் தனிமராய் அந்த
தேக்குமரம் அழுகின்றது
என்னை காணாமல்

படித்த படிப்பை முடிக்கவில்லை
படித்த புத்தகம் விதியிலே
தோட்டத்தின் கரை எங்கும்
பூசணி முளைத்து நிற்கும் ஊர்
தோட்டத்தின் நடுவில்
சேவகனை காணவில்லை காவலுக்கு
ஏன்
என்று புரியவில்லை
எனக்கு

அதிகாலை கூட்டை விட்டு
இனிமையன மாலை பொழுதுதனில்
ஊர் திரும்பும் குருவிகளை காணவில்லை அந்த
இனிமையன சங்கீதம் மனதுக்கு எத்தனை
இதம் என்பதை அறிவீரே
ஊர் வீதி காலில் ஒன்றாக
கூடி பிடுங்கி உண்ட
மாங்கனிகாள் இன்று எங்கே

கூடி விளையாடிய மைதானம்
இன்று சுடுகாடாய் மாறிப்பேச்சு
என் இனத்தின் வளாச்சி எங்கே?
என் சமுதாயம் எங்கே?
கூடி வாழ்த்த இனம் எங்கே?
வீடுகள் எல்லாம் மயானம் ஆகிவிட்ட போது
அங்கு வாழ்ந்த மனிதர்கள் எங்கே?
உலகமே சிநதிப்பாயா????

எழுதியவர் : அஞ்சலி (15-Feb-15, 1:34 pm)
சேர்த்தது : அஞ்சலி
பார்வை : 71

மேலே