காக்கை சிறகினிலே -கவிதை போட்டி-இன்னும் சற்று நொடிகளில்

கடிகாரம் ஒட்டாத நேரம் போல
கடிவாளம்இல்லாமல் வாழ்க்கைபாதை
கையேடு சிக்காத வானவில் தேடி
கணம் கணமாய் அலைகிறதே

கடவுளை தேடிய கல்லான மனங்கள்
கனவுகளோடு காலம் அழியுதுடா
மனிதம் எங்கோ மறைபட்டு போகுதடா

உறக்கம் வராதவன் உறங்குபவன்
மீது கோபம் கொள்வதை போல்
அடுத்தவர் முகத்தையே
ஆராய்கிறது மனது

கடல் தின்ற கரைகளிலே
பல் முளைத்த பறைகளை போல
காலத்தின் செதுக்களிலே
அழகாகிறது வாழ்க்கை

சூரியன் திசைக்கேற்ப இடம் மாறும்
நிழல் போல காலத்தின் கைப்பிடிக்குள்
கட்டுபட்டு நகர்கிறது வாழ்க்கை
காக்கைச்சிறகாய் எதையோ தேடி

எழுதியவர் : இணுவை லெனின் (15-Feb-15, 1:39 pm)
பார்வை : 128

மேலே