இது தேவதைக்கான கானம் -சந்தோஷ்
என் ஆசை பஞ்சவர்ணக்கிளியே!
புத்ததுபுது காலை பனியே!
நீயே என்றும் இளமை பூவே
அதில் மொய்க்கும் வண்டும் நானே.!
கவிதைகள் எழுதும் கோலே -உன்
உயிர்மை கருவும் நாந்தானே.!
வானில் வளரும் என்
தேன் வெண்ணிலா,!
வருவாயா நீயும் என்
அன்பூரில் ஒரு வீதியுலா.!
ஆழ்கடல் ஒளி முத்துகளும்
ஒளிந்துக்கொள்ளுமே உன் முகத்தினைகண்டு!
நீலநதியில் நீந்தும் மீன்களும்
வெட்கப்படுமே உன் கயல்விழியினைகண்டு !
கைகளாம் கிளைகளிலே
செம் மாங்கனிகள் சுமந்தவளே..!
கைதியாகி தவம்கிடக்கும்
மன்னவன் என் மார்பில் படர்வாயா ?
பனிபொம்மை உன்னை சுமக்கும்
பஞ்சனையாய் நான் வரவா?
பொன்தேவதை உனை தீண்டும்
பூந்தென்றலாய் நான் வீசவா... ?
மரகதச்சுடரொளியே..!
நித்திரையிலும் நித்தம் உன் நினைவே- என்
சித்திரரையிலும் குளிரும் மார்கழிப்பூவே
இனிநீயே என் உயிர் பூவே !
உனை மணக்கதான் நினைத்தேனே..!
தினம் சுகக்கடலில் மிதந்தேனே...!
பங்குனியில் பரிசம் போடாலாமா ?-நம்
காலமெல்லாம் காதலாய் களித்திருப்போமா?
------------------------
-இரா.சந்தோஷ் குமார்