சாக்கடல்

உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 378 மீட்டர் (1340 அடி) ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும், 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது. சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம். இந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான்.உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு.
சாக்கடலில் (Dead Sea) ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். உணமையில் அது சாகமுடியாத கடல். சாக்கடல் நீரில் தாங்க முடியாத அளவுக்கு உப்புக்கள் உள்ளன. இதனால் நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே தான் ஒருவர் அக் கடலில் மிதக்க முடிகிறது.

உலகில் உயிரினங்களே இல்லாத கடல் என்று சாக்கடலை கூறலாம். 67 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கடல் ஆழமானது, அதிகளவு உப்புத்தன்மை கொண்டது. அளவு கடந்த உப்புத்தன்மையால் அக்கடலில் எந்த உயிரினமும் வாழ முடியாது. உப்புத்தன்மையை சகித்துக்கொள்ளும் சிற்சில உயிரினங்கள் மட்டும் இந்தக் கடலில் பிழைத்திருக்கின்றன

ஜெர்மனி, மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் சாக்கடலுக்குள் இறங்கி ஆராய்ந்த போது தான் கடலுக்கு அடியில் நுண்ணுயிர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உப்பற்ற நல்ல நீராக உள்ளது. இதன் மாதிரியை அவர்கள் சேகரித்து எடுத்து வந்துள்ளனர்.

கடல், ஏரி என எந்த நீர் நிலையிலும் ஒருவர் எளிதில் நீருக்குள் இறங்க முடியும். நீரில் விழுந்தால் மிதக்கத்தான் செய்வார் என்ற கடலுக்குள் எப்படி இறங்குவது? ஆகவே நிபுணர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலுடன் 40 கிலோ எடையைக் கட்டிக் கொண்டனர்.

ஸ்குபா டைவிங் உடையை அணிந்து கொண்டு இறங்கினர் என்றாலும் விசேஷ ஏற்பாடாக அவர்கள் முகத்தை முற்றிலும் மறைக்கின்ற முக மூடியை அணிந்து கொள்ள வேண்டியிருந்தது. சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு. இந்த நிபுணர்கள் மறுபடி இக் கடலுக்குள் இறங்கி ஆராயத் திட்டமிட்டுள்ளனர்.

சாக்கடலின் நீரிலும் சேற்றிலும் விசேஷ மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இச் சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். சாக்கடல் பொதுவில் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குவது யாவரும் அறிந்ததே.

எழுதியவர் : (17-Feb-15, 6:09 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 285

சிறந்த கட்டுரைகள்

மேலே