மீன்குஞ்சிற்கு நீந்தக் கற்றுத்தருவதோ -வெண்பா

வெண்பா இயற்றுகின்ற வித்தகம் எல்லாம்நம்
மண்பால் இருக்கின்ற மாண்பு

வெண்பா இயற்றுகின்ற வித்தகம் எல்லாம்நம்
மண்பால் இருக்கின்ற மாண்பெனவே - நண்பாகேள்
மீன்குஞ்சு நீந்த மிகபாடம் வேண்டுமோ
தீந்தமிழில் எல்லாம் கவி!
----------------------------------------------------------

நண்பர் திரு. முரளி அவர்கள் என்னால்தான் அவரது வெண்பா திறமை வெளிப்பட்டது என்றார், இல்லை என்பது என் தாழ்மையான கருத்து... வெண்பா நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது, அது நம் மண்ணின் மாண்பு, மீன் குட்டிக்கு நீந்தச் சொல்லித் தர வேண்டுமா என்ன? அது போலவே தமிழன் அனைவருமே சிறந்த கவிஞனே... முயற்சி திருவினையாக்குகிறது, அவ்வளவே!

(இது வெறும் புகழ்ச்சி அல்ல, மெய்யாகவே ‘இரண்டுவரி உரைநடை சரிவர எழுத வராத சாமானிய தமிழன் கூட எளிதாக பாடல் இயற்றிவிடுவான்’ என்று ரெவ்.வின்சுலோ என்ற அறிஞர் தான் தொகுத்த தமிழ்-தமிழ்-ஆங்கிலப் பேரகராதியின் முன்னுரையில் வியந்து குறிப்பிடுகிறார்!)

எழுதியவர் : விஜயநரசிம்மன் (18-Feb-15, 7:36 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 240

மேலே