தனிமரமாய் நான்

அன்னையை தேடி அலைந்தேன்
அன்பு கிடைக்குமென்று !
தந்தையை தேடி அலைந்தேன்
தன்னிறைவு கிடைக்குமென்று !
உறவுகளை தேடி அலைந்தேன்
உரிமைகள் கிடைக்குமென்று !
எதுவும் கிடைக்காத என்னிடம் இருந்த,
என் இதயத்தை அழகு தேவதையான அவள்
பறித்து கொண்டாள் ,
இப்போது நான்
என்னை தேடி கொண்டு இருக்கிறேன் .....
தேடலின் விடை கிடைக்குமென்று ...!