பேசும் சாய்நாற்காலி
!!!!!!!!!!!!!!!!! உண்மை காதலால் உயிர் அற்றப் பொருளும் உயிர்கொண்டு எழும் !!!!!!!!!!!!!!!!!
அதிகாலை அடர்ந்த பனி, அழகிய பூங்கா!!!!!!!!….அங்கு இருக்கும் சாய்நாற்காலி யாருடைய வரவேற்பிற்காக காத்திருப்பது போல் இருந்தது…ஆம் அங்கு இருக்கும் சாய் நாற்காலிக்கு அங்கு வரும் ஒவ்வொரு மனிதரின் முகமும் அவர்களது வாழ்க்கையும் மிகப் பரிச்சையம்…அப்படிதான் நிரஞ்சனும்,நிரல்யாவும்….
இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் புரிந்தவர்கள்…..அதிகாலையில் இருவரும் ஒன்றாக எழுந்து வாக்கிங் போவது பழக்கம்….அப்பொழுது அந்த சாய் நாற்காலியில் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் மனம்விட்டு பேசும் பழக்கம் உண்டு…அவர்களது செல்ல சண்டைகளையும், ஆழமான காதலையும் பார்க்கும் போது இப்படி ஒரு வாழ்வு நமக்கு கிட்டாதா என்று அடுத்தவர்கள் ஏங்கும் வண்ணம் அழகானது….. அந்த அழகு அங்கு உள்ள சாய் நாற்காலிக்கு மட்டுமே
மிகப்பரிச்சயம்….
அவர்களது வரவிற்க்காக எப்பொழுதும் காத்திருக்கும் சாய் நாற்காலிக்கு ஒரு வாரமாய் ஏமாற்றம் தான் மிஞ்சியது…..மறு நாள் திடீர் என இருவரும் வந்தனர்….ஆனால் சாய் நாற்காலிக்கு மிக ஆச்சரியமாகவும் அதிரிச்சியாகவும் இருந்தது….
காரணம் ..........................................அவர்கள் வந்த விதமும் நேரமும்…எப்பொழுதும் பகலில் வரும் இவர்கள் வழக்கத்திற்க்கு மாறாய் இரவில் வந்துள்ளனர்…..இருவரும் தனி தனியே வந்து அமர்ந்தனர்…நிரஞ்சன் ஒரு ஒரத்திலும் நிரல்யா மறு ஒரத்திலும்….அதுவரை அன்யோன்னியமாக இருந்த இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று வியந்து போன சாய் நாற்காலி அவர்கள் இருவரின் பேச்சுக்காக காத்திருந்தது…..ஆனால் மெளனமே மிஞ்சியது…. பொறுமை இழந்த நாற்காலி சற்றே அவர்கள் மெளனம் கலைக்கும் விதமாய் வேகமாய் அவர்களை கீழே தள்ள முயன்றது….சற்றும் எதிர்பாராதவிதமாய் இருவரும் கீழே விழ !!!!!!!!!!!!!!!!!!!
சற்று பதரிப்போனவானாய் அவளிடம்
உனக்கு ஒன்னும் அடிப்படலையே நிரல் என்றான்…..
அதை சற்றும் எதிர்பாரதவளாய் ஹ்ம்ம்ம் மனதில் பட்ட அடியை விட இது ஒன்றும் பெரிதில்லை நிரஞ்சன் என்றாள்….
*************************************************************************************
அவனுக்கு அவள் சொல்லிய அந்த வார்த்தை நெஞ்சில் முள் தைத்தது போன்று இருந்தது…..அவனுக்கு மட்டும் இல்லை அந்த சாய் நாற்காலிக்கும் தான் அவர்களது பிரிவு அவர்களை விட அந்த சாய்நாற்காலியை பாதித்தது ஒரு தாயின் வேதனைப்போல்…..இருந்தும் ஒரு பக்கம் அவர்களது மெளனக் கலைந்ததைக்கண்டு சிறு ஆனந்தம்…..அப்பொழுது !!!!!!!!!!!!
*************************************************************************************
சரி ஒத்துக்குறேன் நா பண்ணது பெரிய தப்பு தான்…..ஆனா நா வேணும்-னு செய்யல நிரல்….புரிஞ்சுக்கோ டி…அன்னைக்கு பிரெண்ட்ஸ் ஓவரா ஊத்திகுடுத்துட்டாங்க…அதான் அளவுக்கு அதிகமா குடிச்சுட்டேன்….. அது ஒரு பெரிய குத்தமா தாயே……எதாவது சொல்லு நிரல் !!!!! அமைதியா இருக்காதா…ஒரு வாரமா உன்கிட்ட பேசமா ஒரே வீட்டுல இருக்குறது எவ்வளவு நரகமா இருக்கு தெரியுமா???காரணமே தெரியாம மண்ட காயுது…..அப்படி என்ன தப்பா பண்ணிட்டேன் டி….ஜாலிக்காக குடிக்குறது பெரிய குத்தமா??தப்புனா மன்னிச்சுக்கோ தாயே….இனி குடிக்கல போதுமா……இதப்பத்தி பேச இந்நேரம் இங்க வரனுமா???
ஓ அப்படியா நல்ல காயட்டும்….எவ்வளவு ஈசியா சொல்லிட்ட நீ மன்னிச்சுடு-னு….குடிச்சதோடவா விட்ட என்னலாம் பேசின என்ன….ஹ்ம்ம்….மனசுல இருக்குறது தான வார்த்தையா வரும் மிஸ்டர்.நிரஞ்சன்…..!!!!! எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா எனக்கு…அப்படியே என் இதயத்த சதையோட புடுங்கி எடுத்தமாறி இருக்கு…..இன்னும் அதில இருந்து மீள முடியல…..இத்தன நாள் நாம விரும்புனதே அர்த்தம் இல்லாம போச்சோ-னு தோனுது…..இனி நீ குடிச்சா என்ன குடிக்காட்டி எனக்கு என்ன….
*************************************************************************************
அப்படி என்னதான் இவன் சொல்லி தொலைந்தான்….இவ இப்படி கஷ்டப்படுற அளவுக்கு என்று நாற்காலி யோசித்துக்கொண்டு இருக்கையில்…..
*************************************************************************************
என்ன சொல்லுற நீ ????????அப்படி என்ன தான் சொன்னேன்???????….அத சொல்லு டி ….
உன் மனசாட்சிய கேளு அது சொல்லும் மிஸ்டர்.நிரஞ்சன்….
அய்யோ நியாபகம் வரல டி….ஒரு வாரமா யோசிச்சு யோசிச்சு ஞாபகம் வரல……ஞாபகம் வந்தா உன்கிட்ட ஏன் கேட்கப்போறேன்?????????….
ஓ அப்ப ஞாபகம் வந்தா , என்கிட்ட கேட்டு இருக்க மாட்ட!!!!!!!!!!!! அப்படி தானே…?????.அதனால தான் இப்ப என்கிட்ட வந்து பேசுற…இல்லனா பேசி இருக்கமாட்ட…என்ன ஒரு ஆண் ஆதிக்கம்….இவ்வளவு மோசமானவா நீ?????நா கூட செஞ்ச தப்ப புரிஞ்சு மன்னிப்பு கேக்கதான் பேசுறியோனு நினைச்சேன்…..
என்னடி!!!!! நீ எப்படி பேசுனாலும் தப்புனு சொல்லுற……இப்ப என்ன என்னதான் பண்ணணும்-னு சொல்லுற????
ஆமா நான் தான் தப்பா சொல்லுறேன்…தப்பா பேசுறேன்…..நீ சரியா தான் பேசுற நிரஞ்சன்…..நீ எதும் பண்ணவேண்டாம்….எல்லாம் முடிஞ்சு போச்சு நமக்குள்ள……..இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் மாறிடும்…..
***********************************************************************************
அவள் என்ன செய்யப் போகிறாளோ என்ற பதட்டத்துடன் சாய் நாற்காலி அவர்களின் பேச்சை கவனித்துக்கொண்டு இருந்தது
*************************************************************************************
அதிரிச்சியில் ஆழ்ந்தவனாய் என்ன டி சொல்லுற….??????இந்த சின்ன விஷயத்த போய் இவ்வளவு பெருசா ஆக்குற????என்ன பண்ணப்போற??? சரி நா உண்மைய ஒத்துக்குறேன்….நா அன்னைக்கு சத்தியமா குடிக்கல….குடிச்சமாறி நடிச்சேன்…அதெல்லாம் ஒரு பிளான்…உன் பிறந்தநாள் அடுத்தவாரம் வருதுல….அப்பதான் நீ என் மேல கோவப்படுவ சண்டப்போடுவ…..உன் பிறந்தநாளைக்கு சர்பிரைஸ்-ஸா எல்லாம் உண்மையும் சொல்லி உனக்கு கிப்ட் கொடுத்து அசத்தலாம் –னு பண்ணேண்…ஆனா நீ என்னனா என்கிட்டயே கேம் ஆடுற…….
*************************************************************************************
சாய் நாற்காலிக்கு ஆச்சரியம் தாளவில்லை….அடபாவி நல்ல வேணும் அவள அழவச்சில….இப்ப நீ அழு….சர்பிரைஸ் குடுக்குறானாம் புடலங்கா பைய…அதுக்குனு இப்படியா என் பொண்ண அழவைப்பான்……இப்ப அவ கோச்சுகிட்டா….நல்ல வேணும்…….அனுபவி………….என்று அவனை திட்டியது…………
*************************************************************************************
இல்ல நீ பொய் சொல்லுற….நீ அன்னைக்கு குடிச்சுதான் இருந்த…..
சத்தியமா இல்ல டி என்ன நம்பு ……
சரி அப்ப நீ கண்ண மூடி சொல்லு ….நான் நம்புறேன்……
என்னது கண்ண மூடி சொல்லனுமா??????இது என்ன சின்னபிள்ள தனமா இருக்கு…..
முடிஞ்சா பண்ணு….இல்லாட்டி விடு நா கிளம்புறேன்…..
சரி சரி இரு ……..கண்ணமூடி சொல்லுறேன்…அப்பவாது என்ன நம்பு…
*************************************************************************************
சாய் நாற்காலிக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது……இவ ஏன் இப்படி பண்ணுறா……கண்ண திறந்து சொன்னப்பவே நம்பல….இப்ப மட்டும் எப்படி நம்புவா????என்ன பண்ணுறா என்று குழம்பும் வேளையில்……..அவள் இருக்கையை விட்டு ஒரு திசையில் சென்று மறைந்தாள்…..சாய் நாற்காலிக்கு மேலும் பதட்டம் கூடியது….ஒரு வேளை இவனவிட்டு ஒரேடியா போறாளோ……டேய் லூசு பயலே கண்ண திறடா……அவ போய்ட்டா டா….டேய் டேய் என்று கத்தியது அவன் காதிற்க்கு அதன் குரல் கேட்டகாது என்பதை ,மறந்து…முதன் முதலாக சாய் நாற்காலி கண் கலங்கியது…..அவர்களின் பிரிவால்……நான் மட்டும் மனுசனா பிறந்து இருக்க கூடாதா???அப்படி மனுசனா பிறந்து இருந்தா இவுங்க இரண்டு பேரையும் பிரியவிடமாட்டேன்…. கடவுளே இவுங்க இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு வச்சு இருக்காங்க......எதாவது ஒரு மேஜிக் பண்ணி சேத்து வைங்க….என்று புலம்பியது………
*************************************************************************************
நா அன்னைக்கு குடிக்கல இப்பவாது நம்புமா தாயே…….என்று கண்விழித்தவனுக்கு பேர் அதிர்ச்சி……நிரல் நிரல் எங்க டி போன????? என்று கத்தினான்….அப்பொழுது…….
அந்த சாய் நாற்காலியின் பின்பு யாரோ அவனை அழைத்தனர்…. திரும்பியவனுக்கு பேர் அதிர்ச்சியாய் இருந்தது…. அப்பா,அம்மா,மாமா,அத்த நீங்களா……நீங்க எப்படி இங்க……????அவர்கள் கண்ணீர் சொட்ட சொட்ட ஒரு காகித்தை நீட்டினர்…….அந்த காகிதத்தை பார்த்த அடுத்த கணம் அவன் எண்ணங்கள் பலவிதமாக அலைப்பாய தொடங்கின….இருந்தும் தன் மனதை தேத்திக்கொண்டு ஒருவித நடுக்கத்துடன் அதைப் பிரித்து படிக்கத்தொடங்கினான்………
*************************************************************************************
சாய் நாற்காலி துக்கத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது…அந்த கடிதத்தில் என்ன இருக்கும் என்று நடுக்கிக்கொண்டே நிரஞ்சன் சத்தமாக படிக்கமாட்டானா என்று ஏங்கி அவனையே நோக்கியது…….
*************************************************************************************
என் அன்பான பாசமான மதிப்புள்ள என் இஷ்ட பைத்தியமே சற்று நேராக பாரும் யா என்று எழுதி இருந்தது….. படித்த அடுத்தகணம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை…..என்னப்பா இது என்று திரும்பினான்….அங்கு யாரும் இல்லை….ஒரே அமைதி….ஒரு நிமிடம் அமைதியாய் நேரே பார்த்துக்கொண்டே இருந்தான்….யாரும் கண்ணில் தென்படவில்லை….
அப்பொழுது திடீரென ஒரு ஒளி யாரோ தொலைவில் மெழுகுவர்த்தியில் தீப்பற்றி அவனருகே வந்துக்கொண்டு இருந்தனர் ஒரு கும்பலாக…..அருகில் வர வர அவனுக்கு பயம் அதிகரித்தது…
*************************************************************************************
அவனுக்கு மட்டும் இல்லை அந்த சாய் நாற்காலிக்கும் ஒன்றும் புரியவில்லை…..திகிலுடன் அந்த கும்பலை நோக்கியது……………….
*************************************************************************************
திடீரென எல்லோரும் கும்பலாக ஹாப்பி பிர்த்டே டு நிரஞ்சன் என்று பாடிக்கொண்டே அருகில் வந்தனர்…. அவனுக்கு அப்பொழுது தான் உயிரே வந்தது நிரல்யாவின் நாடகம் இவையெல்லாம் என்று…..நிரல்யா கையில் கேக்குடன் அவனை நோக்கி வந்தாள்….Happy birthday My swt betterhalf……அவளை முறைத்தவாறே இதெல்லாம் உன் வேலை தான….பாவி கொஞ்ச நேரத்துல உயிரே போய்டுச்சு….ஏன்டி இப்படிப் பண்ண…….
*************************************************************************************
சாய் நாற்காலிக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது…..மனம் நிறைந்த மகிழ்ச்சியில் அவர்களது கொண்டாட்டங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது….
*************************************************************************************
அவர்களது சண்டையை இடைமறிக்கும் விதமாய் அவர்களது பெற்றோர்கள் சரி சரி சண்ட போடாதிங்க…முதல்ல கேக்-க வெட்டுங்க….அப்புறம் உங்க சண்டைய முடிச்சுட்டு வாங்க வீட்டுக்கு…… அப்பா நீங்களுமா????? என்றான்…ஆமா டா எங்களை எத்தன வாட்டி இப்படி சர்பிரைஸ்-னு பேர்-ல அழவிட்ட அதான் உனக்கும் அதை காட்டினோம்….. நல்ல காட்டினீங்க…போங்க உயிரே போய்டுச்சு என்றான்…எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்…பின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினர் நிரல்யா நிரஞ்சனை தவிர……..
***********************************************************************************
சாய்நாற்காலி மகிழ்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றது….எத்தனைக் காதல் என்ன ஒரு அன்பு……..என்று அவர்களை மனம் பொங்க வாழ்த்தியது…….ஒரு வித அமைதியில் அவர்களின் வழக்கமான ஊடலை இரசித்துக்கொண்டு இருந்தது…..
*************************************************************************************
நிரஞ்சன் சாய் நாற்காலியில் கோபமாய் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தான்…..அவனை நோக்கி எப்படி இருந்தது என் சர்பிரைஸ்????என்றவளிடம் கோபமாய் போடி லூசு…கொஞ்ச நேரத்துல உயிரே போய்டுச்சு…ஒரு வாரமா இவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா???என் பிறந்த நாள் கூட மறந்துட்டேன்….அந்த அளவுக்கு உன் மேல பாசமா இருக்கேன்…நீ என்னனா என்ன அழவிட்ட…போ பேசாத……
கலகலவென்று சிரித்தவளாய் அப்ப சார் மட்டும் என்ன அழவிட பிளான் பண்ணலாமா??நீ என் பிறந்தநாள்-க்கு சர்பிரைஸ் குடுக்க தான் அன்னைக்கு அப்படி வந்த-னு எனக்கு தெரியும் உன் பிரெண்ட் கிட்ட போன் –ல பேசுனத கேட்டேன்…அதான் உனக்கே ஒரு டுவிஸ்ட் வச்சேன்…..எப்படி என் டுவிஸ்ட்???
போடி போ பேசாத என்று அவன் சண்டை போட அப்பொழுது அவள் அப்ப கிப்ட் கிடைக்காது…பரவாயில்லையா???
என்ன கிப்ட் வச்சிருக்க….
உன் கண்ணு முன்னாடியே தானே இருக்கு….
எங்க டி??
அட நான் தான் டா மடையா….என்ன விட உனக்கு என்ன சிறந்த கிப்ட் இருக்கப்போது என்றாள்…….
உண்மைதான் என்பது போல் அவளையே கண்கொட்டாது பார்த்துக்கொண்டே இருந்தான்……
அப்பொழுது அவர்களில் காதலை கண்டு அங்கிருக்கும் மரங்களே தென்றல் வடிவில் பூத்தூவி வாழ்த்தியது….
-------------------------------------------------------------------------------முற்றும்------------------------------------------------------------------------