சிந்திக்க சில விடயங்கள்-2

233889 என்கிற எண்ணில் பதிவான கட்டுரையின் தொடர்ச்சி.....
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை இருந்தும் தோல்வி பெறுவது சகஜம். அதற்காக சரிந்து விடுதல் தவறு. விடா முயற்சியும், உறுதியும் மட்டுமே சர்வ வல்லமை படைத்தவை. இவற்றிற்கு என்றுமே நற்பலன்கள் உறுதி.
நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள். சில தொலைவு கிலோ மீட்டர் தூரம் போக நாம் எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்கிறோம். சுகமாக போய் சேருவோமா என்கிற அவநம்பிக்கைதான் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் கனடாவில் இருந்து மெக்சிகோவிற்கு பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவு நம்பிக்கையோடு ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக ஒரு பயணம் நடக்கிறது. வழியில் உணவு கிடைக்குமா? தங்குமிடம் கிடைக்குமா?என்று கவலைப் படாமல் வழியில் ஆடிப்பாடி பயணம் நடக்கிறது. அந்தப் பயணத்தை செய்வது வேறு யாருமல்ல. பறவைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்தான். இந்த பிரபஞ்சத்தை அவைகள் நம்புகின்றன. உணவு கிடைக்கும் என்றும் ஓய்வு கிடைக்குமென்றும் அவைகள் வருடந்தோறும் பயணம் மேற்கொள்கின்றன.
நமது தாய் மண் நமக்கு வாழ்வுதரும் என்கிற நம்பிக்கை நமக்கில்லை. வேடந்தாங்கலையும், அருகில் உள்ள ஏரிகளையும், மரங்களையும் நம்பி கண்டம் விட்டு கண்டம் கடந்து பறவைகள் வருடம் தோறும் வருகின்றன. இந்த உலகம் நம்மை காப்பாற்றும், உணவளிக்கும், வாழ வைக்குக் என்கிற பாடத்தினை பறவைகள் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நீங்களும் நம்பிக்கைப் பாடம் படியுங்கள். அதன் பலனை உணருங்கள்.
வழக்கறிஞராக இருந்த மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது ஒரு சம்பவம். வெள்ளையர் மட்டுமே பயணம் செய்யும் ரயிலில் காந்தி அவர்கள் ஏறி அமர்ந்தார். அவரை பிடித்து இழுத்து ரயிலை விட்டு வெளியில் தள்ளினார் அந்த வெள்ளையர். அந்த கோபத்தில் பிளாட்பாரத்திலேயே சத்யாகிரகம் செய்ய ஆரம்பித்துவிட்டார் காந்தி அவர்கள். அதுதான் சுதந்திரப் போரின் துவக்கமும் கூட. அந்த வெள்ளையர் கீழே தள்ளியிராவிட்டால், காந்தி என்கிற மனிதன் நிறைய சம்பாதித்து, குடும்பத்தை மட்டுமே காப்பாற்றி ஒரு சராசரி வக்கீலாக மட்டுமே இருந்திருப்பார். மகாத்மாவாக ஆகி இருக்க மாட்டார். உலகறிய போற்றப் படும் அளவில் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. எப்போது ஒருவன் நிந்திக்கப் படுகின்றானோ அச்சமயத்தில் துவண்டு சரியாமல் சிந்தித்து செயல்படும்போது அவனுக்கு வெற்றிகள் உறுதி.
----------------> இன்னும் வரும்......